த ன்னை பல்வைத்திய விஞ்ஞான பட்டப்படிப்பை தொடர அனுமதிக்கப்படாமைக்கு எதிராக முல்லைத்தீவைச் சேர்ந்த அனுஜா யோகநாதன் எனும் மாணவி தொடுத்த வழக்கில் பிரதிவாதியான மற்றொரு மாணவி வி.ஜயவதனி ஆட்சேபம் தெரிவிப்பதற்கு பெப்ரவரி 29 ஆம் திகதிவரை மேன்முறையீட்டு நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.
முல்லைத்தீவை சொந்த இடமாகக் கொண்ட தான் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றவகையில் பல்கலைக்கழகத்தில் பல்மருத்துவ பட்டப்படிப்பை தொடர்வதற்கு அனுமதிக்காமல் முல்லைத்தீவைச் சேராத ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அனுஜா யோகநாதன் குறிப்பிட்டுள்ளார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, அதன் மேலதிக செயலார் டாக்டர் பிரியந்த பிரேமகுமார, பல்கலைக்கழக பல்வைத்திய விஞ்ஞானப் பிரிவுக்குத் தெரிவான பரீட்சார்த்தியான வி.ஜயவதனி ஆகியோரை அவர் பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவு நகரம் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 1989 ஆம் ஆண்டு தான் அங்கு பிறந்ததாக மனுதார் அனுஜா யோகநாதன் தெரிவித்துள்ளார்.. 1990 ஆம் ஆண்டு அரசாங்க படைகளுக்கும் எல்.ரி.ரி.ஈ.யினருக்கும் இடையிலனா கடும் மோதலின் காரணமாக பெரும் எண்ணிக்கையான மக்கள் 12 கி.மீ. தொலைவிலுள்ள புதுக்குடியிருப்பு கிராமத்திற்கு இடம்பெயர்ந்தனர் எனவும் தான் க.பொ.த. உயர்தரப்பரீட்சை வரை புதுக்குடியிருப்பில் தற்காலிக வீடொன்றில் தங்கிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மோசமான சூழ்நிலையிலும் 2005 ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரணத் தரப் பரீட்சையில் தான் எட்டு அதிவிசேட சித்திகளை பெற்றதுடன் 2008 ஆம் ஆண்டு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் க.பொ.த. உயர்தரப் பரீட்சை எழுதியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அந்தத் தடவை மிருகவைத்திய பீடத்திற்கு தான் தெரிவாகுவதற்கு தான் தகுதிபெற்ற போதிலும் மருத்துவப் பீடத்திற்கு தெரிவாக விரும்பியதால்மீண்டும் பரீட்சை எழுதத் தீர்மானித்தாக கூறியுள்ளார். பின்னர் கடும் இராணுவ மோதல் காரணமாக தானும் தனது குடும்பத்தினரும் அங்கிருந்து தப்பிச்சென்று வவுனியா மாவட்டத்திலுள்ள மெனிக் பாம் இடம்பெயர்ந்தோர் முகாமில் தங்கியிருந்ததாகவும் 2009 ஆம் ஆண்டு வீரபுரம் இடம்பெயர்ந்தோர் முகாமில் தங்கியிருந்த நிலையில் உயர்தர பரீட்சை எழுதியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பரீட்சை பெறுபேறுகள் வெளியான பின் பேராதனை பல்கலைக்கழத்தில் மிருக வைத்திய விஞ்ஞானப் பிரிவில் பாடநெறியைத் தொடர்வதற்கு தான் தகுதிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டதாக அம்மாணவி குறிப்பிட்டுள்ளார். இப்பாடநெறியைத் தொடர்வதற்கு 2009 ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெயர்ந்தோர் முகாமிலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டார். 2003 ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாவட்டத்தின் பருத்தித்துறையில் உயர்தர மாணவியாக இருந்த மூன்றாவது பிரதிவாதியான ஜெயவதனி, 2007, 2008 ஆம் ஆண்டுகளில் மருத்துவ சான்றிதழ்களை சமர்ப்பித்து பரீட்சைக்குத் தோற்றுவதைத் தவிர்த்து 2009 ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் தனிப்பட்ட பரீட்சார்த்தியாக தோற்றியதாகவும் மனுதாரர் அனுஜா கூறியுள்ளார். மருத்துவம் மற்றும் பல் மருத்துவ பாடநெறிகளுக்கான இஸ்ட் ஸ்கோர் வெட்டுப்புள்ளி கிளிநொச்சிக்கு அடுத்ததாக முல்லைத்தீவு மாவட்டத்திலேயே இரண்டாவது ஆகக்குறைவாகவுள்ளதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவில் க.பொ.த. உயர்தரப் படிப்பை மேற்கொண்ட மாணவர்கள் தமது பல்கலைக்கழக அனுமதிக்கு கூடுதலாக முன்னேற்றமடைந்த யாழ்ப்பாண மாவட்டத்தில் க.பொ.த. உயர்தரப் படிப்பை மேற்கொண்ட மாணவர்களுடன் போட்டியிட வேண்டும் என எதிர்பார்ப்பது முறையற்றதும் நியாயமற்றதுமாகும் என அவர் குறிப்பிட்டள்ளார். 2009 ஓகஸ்ட் மாத பரீட்சை பெறுபேறுகளின்படி, மூன்றாவது பிரதிவாதியான ஜெயவதனி முல்லைத்தீவு மாவட்ட பரீட்சார்த்தியாக உள்ளடக்கப்பட்டிருக்காவிட்டால் தான் பல்வைத்தியத்துறைக்கு தெரிவுசெய்யப்பட்டிருப்பார் எனவும் மனுதாரரரான அனுஜா தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’