வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 13 ஜனவரி, 2012

எல்.ரி.ரி.ஈ. முன்னாள் போராளிகள் எம்முடன் இணைந்துள்ளனர்: ஜே.வி.பியிலிருந்து பிரிந்த குழுவினர்


மிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள், வட மாகாணத்தில் அரசியல் செயற்பாடுகளுக்காக தம்முடன் இணைந்து செயற்பட்டதாகவும், டிசெம்பர் 9 ஆம் திகதி கடத்தப்பட்ட குகன் முருகானந்தனும் புலிகள் அமைப்பின் நடவடிக்கைகளில் முன்னர் சம்பந்தப்பட்டிருந்ததாகவும் ஜே.வி.பியிலிருந்து பிரிந்த குழுவினர் தெரிவித்தனர்.
ஜே.வி.பியிலிருந்து பிரிந்தவர்களில் ஒருவரும் 'நாம் இலங்கையர்' அமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினருமான உதுல் பிரேமரட்ன இது தொடர்பாக கூறுகையில், நாட்டில் சுமார் 900 அரசியல் கைதிகள் இருப்பதாகவும் அவர்களில் 500 பேருடன் தாம் தொடர்புகொண்டுள்ளதாகவும் கூறினார். 'தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அங்கத்தவர்கள் எம்முடன் உள்ளனர் என்பதை நாம் தெளிவுபடுத்த விரும்புகிறோம். அதை தெரிவிப்பதற்கு நாம் அஞ்சவில்லை. நாம் பிரிவினைவாத பயங்கரவாதத்தை அங்கீகரிக்கவில்லை பிரிவினைவாத அமைப்புகள் எதனுடனும் நாம் அரசியல் நடத்தவில்லை. எனினும் முன்னாள் போராளிகளுடன் நாம் இணைந்து செயற்படுகின்றோம்' என அவர் கூறினார். தமது அமைப்பின் அங்கத்தவர்கள் முன்னர் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை ஆதரித்தவர்கள் என்பதால் தம்முடன் இணைந்து செயற்படுவதற்கு எல்.ரி.ரி.ஈ. முன்னாள் போராளிகளை சம்மதிக்கச் செய்வது கடினமாக இருந்தது எனவும் அவர் தெரிவித்தார். எனினும் பிரச்சினைகளின் உண்மையான காரணம் வேறு இடத்தில் உள்ளது என்பதை நாம் அவர்களுக்கு விளக்கினோம். தமிழர்கள் என்ற காரணத்தினால் அவர்களுக்கு பிரச்சினைகள் உள்ளன என்பதை நாம் ஏற்றுக்கொண்டோம். எனினும் பிரச்சினையின் அடிப்படைக் காரணம் வர்க்க பேதங்கள் மற்றும் செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்குமான இடைவெளியாகும். வர்க்கப் பிரச்சினை உள்ளது இதற்கு நாம் தீர்வுகாண வேண்டும்' என அவர் கூறினார். எல்.ரி.ரி.ஈ. முன்னாள் போராளிகளுக்கு அரசியல் வாய்ப்புகள் உருவாக்கப்படாவிட்டால் அவர்கள் மீண்டும் பிரிவினைவாதத்தை நோக்கி தள்ளப்படலாம் என உதுல் பிரேமரட்ன கூறினார். டிசெம்பர் 9 ஆம் திகதி கடத்தப்பட்ட குகன் முருகானந்தன் மற்றும் லலித் குமார் வீரராஜு ஆகியோர் கடத்தப்பட்டமை குறித்து ஐ.நா.விடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக ஐ.நா. விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’