தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் பிரதம ஆயுத கொள்வனவாளரான குமரன் பத்மநாதனுக்கு எதிரான வழக்கை அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில் விசாரிப்பதா இல்லையா எனத் தீர்மானிப்பதை ஏப்ரல் 19 ஆம் திகதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஒத்திவைத்தது. பொன்னையா ஆனந்த ராஜா அல்லது ஐயா மற்றும் சுப்ரமணியம் சிவகுமார் அல்லது ராஜன் ஆகியோருக்கான வழக்கிலேயே நீதிபதி சுனில் ராஜபக்ஷ இந்த அறிவிப்பை விடுத்தார்.
இவ்விரு சந்தேக நபர்களும் அமெரிக்கா, கனடா, மலேஷியா, நோர்வே, இலங்கை மற்றும் ஏனைய பல ஐரோப்பிய, ஆசிய நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக நிதி திரட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவ்விருவரும் கே.பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனின் நிதிச்சொத்துகளுக்கு பொறுப்பாக இருந்ததாக சட்ட மா அதிபர் ஈவா வனசுந்தர குற்றம் சுமத்தியுள்ளார் என சிரேஷ்ட அரச வழக்குரைஞர் ரியாஸ் பாரி தெரிவித்தார். இரண்டாவது சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதாகவும் அவரை கைது செய்வதற்கு சிவப்பு அறிவித்தல் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் வழக்குரைஞர் ரியாஸ் பாரி கூறினார். எனினும் இதுவரை அவரை இன்டர் போல் கைது செய்வதற்கு முடியவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’