வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 16 ஜனவரி, 2012

மனிதக் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையர் இந்தியாவில் கைது


னிதக் கடத்தலில் தொடர்பிருந்ததாகத் தெரிவிக்கப்படும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவாளர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் சென்னையிலுள்ள செங்கல்பட்டில் கொச்சி நகர பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கேரளாவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு மீன்பிடிப் படகில் 39 இலங்கைத் தமிழர்களை சட்டவிரோதமாக அனுப்பிவைக்க முயன்ற சம்பவம் தொடர்பிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேற்படி நபர் கண்டியைச் சேர்ந்த (வயது 38) செந்தூரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு அழைத்துவரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மேற்படி நபர், நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். இவரைத் தடுத்துவைத்து விசாரித்து மனிதக் கடத்தல் முயற்சியில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படும் ஏனைய நபர்களையும் கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். கடந்த செப்டெம்பர் மாதம் மேற்கொள்ளப்படவிருந்த மனிதக் கடத்தல் முயற்சி முறியடித்ததுடன், இதில் சம்பந்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் நான்கு மலேசியர்கள் உட்பட ஒன்பது பேரை பொலிஸார் கைதுசெய்திருந்தனர். அத்துடன், அவுஸ்திரேலியாவுக்கு இலங்கைத் தமிழர்களை கொண்டுசெல்லவிருந்ததாகத் தெரிவிக்கப்படும் படகொன்றையும் முன்னம்பம் பகுதியில் பொலிஸார் கைப்பற்றினர். 28 ஆண்கள், 7 பெண்கள் மற்றும் 4 சிறுவர்கள் அவுஸ்திரேலியாவுக்குச் செல்லவிருந்த குழுவில் அடங்குகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’