இலங்கையைச் சேர்ந்த தனது முன்னாள் காதலியை கத்தியால் குத்தி கொலை செய்யமுயன்ற குற்றச்சாட்டுக்குள்ளான இந்தியாவைச் சேர்ந்த தனியார் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஒருவர் துபாய் நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்த்துள்ளார்.
ஜே.கே.கே. என குறிப்பிடப்படும் 32 வயதான இந்நபர், தனது காதலியை தாக்குவதற்கு முன்னர் டிடிரி மருந்தை உட்கொண்டதாக துபாய் சுகாதார அதிகார சபை தெரிவித்துள்ளது. துபாய் குற்றவியல் நீதிமன்றில் நீதிபதி சயீட் மொஹமட் புர்குத் முன்னிலையில் இவ்வழக்கு நேற்று விசாரிக்கப்பட்டபோது ஜே.கே.கே. தன்மீதான குற்றச்சாட்டை நிராகரித்தார். 40 வயதான என்.பி.ஏ. என குறிப்பிடப்படும் பெண்ணையே இவர் கத்தியால் 3 தடவை குத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அப்பெண் சாட்சியமளிக்கையில், '6-7 மாதங்களுக்கு நான் அவரின் காதலை நிராகரித்து, திருமணம் செய்ய மறுத்ததால் அவர் என்னை பழிவாங்க முற்படுகிறார். அப்போதிருந்து என்னை கொன்றுவிட்டு அவர் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக அச்சுறுத்தி வருகிறார்' எனக் கூறியுள்ளார். இப்பெண்ணை ஜே.கே.கே. அருகிலுள்ள சுப்பர் மார்கெட் ஒன்றில் அல்லது பஸ் நிலையத்தில் சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்ததாகவும் அங்கு வைத்து அப்பெண்ணை அச்சுறுத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 'உன்னை கொல்வேன். உனது வாழ்க்கை முடிவுக் வரவேண்டும்' என ஜே.கே.கே. கூறினாராம். அல் நஹ்டா-1 பகுதியிலுள்ள ஷராவ் அல் டீன் கட்டிடத்திலுள்ள அப்பெண்ணின் எஜமானரின் வீட்டில் இரவு 11.30 மணியளவில் வந்து அப்பெண்ணை ஜே.கே.கே. கத்தியால் குத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. எஜமானரின் தாயார் வசிக்கும் அருகிலுள்ள வீடொன்றில் தான் உறங்கச் செல்லவிருந்தாகவும், கதவை திறந்தபோது ஜே.கே.கே. தன்னுடன் மோதி தன்னை வயிற்றிலும் கையிலும் கத்தியால் குத்தியாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார். தான் பலம்கொண்டமட்டும் கத்தியை பிடித்துக்கொண்டு உயிருக்குப் போராடி கூக்குரலிட்டதாகவம் பின்னர் கட்டிடத்தின் 8 ஆவது தளத்தில் வசித்தவர்கள் வெளியில் வந்து இதில் தலையிட்டதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார். இதேவேளை, விசாரணையின்போது, என்.பி.ஏ. வை திருமணம் செய்வதற்காக தான் ஏற்கெனவே இந்து மதத்திலிருந்து இஸ்லாத்திற்கு மாறியுள்ளதாக ஜே.கே.கே. தெரிவித்தார்' என மேஜர் சுஹைல் கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’