அதிகார பகிர்வு தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு விரைவில் பேச்சு நடத்தவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனுடன் அதிகார பகிர்வு தொடர்பில் பேச்சு நடத்துவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். 'முதலமைச்சர் சந்திரகாந்தனால் பேச்சு நடத்துவது தொடர்பில் விடுக்கப்ட்ட வேண்டுகோளையடுத்து, தேசிய பிரச்சினை தொடர்பில் பேச்சு நடத்தி அரசியல் தீர்வு தொடர்பில் ஒர் இணக்கப்பாட்டுக்கு வர தீர்மானித்துள்ளோம்' என சம்பந்தன் தெரிவித்தார். இப்பேச்சு தொடர்பிலான திகதி இதுவரை தீர்மானிக்கப்படவி;ல்லை. பேச்சுக்கான திகதியை தீர்மானிப்பது தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியினருடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார். அதிகார பகிர்வு தொடர்பில் இணக்கப்பட்டுக்கு வருவதற்கும் பேச்சு நடத்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு முதலமைச்சர் சந்திரகாந்தன் அண்மையில் அழைப்பு விடுத்திருந்தார். வடக்கு கிழக்கு இணைப்பு தவிர்ந்த காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் தங்களுடன் ஒருமித்த கருத்துடனேயே உள்ளோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சி.சந்திரகாந்தன் அண்மையில் கடிதம் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’