வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 26 ஜனவரி, 2012

ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்திடம் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை சமர்ப்பிக்கப்படாது: ஜி.எல்.பீரிஸ்


னாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை இலங்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்திடம் சமர்ப்பிக்கமாட்டாது என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத்தொடரில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படுமா என ஊடகவியலாளரொருவர் இன்று வியாழக்கிழமை வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வினவியதற்கே அமைச்சர் பீரிஸ் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அத்துடன் அது தொடர்பிலான எந்த எண்ணமும் இலங்கை அரசுக்கில்லை. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஓர் உள்நாட்டு ஆணைக்குழுவாகும். குறித்த ஆணைக்குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் கடந்த வருடமே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத்தொடர் மார்ச் மாதம் நடைபெறவுள்ளமையால் நல்லிணக்க ஆணைக்குழுவினால் முன்மொழியப்பட்ட சிபாரிசுகளை அரசாங்க அமுல்படுத்த சுமார் இரண்டு மாதங்கள் உள்ளன. இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்தோனேஷிய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி மார்டி நட்டலெகவும் இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’