வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 21 ஜனவரி, 2012

காலத்தை இழுத்தடிக்கிறது அரசு: சுரேஷ் எம்.பி.


ரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை – நாடாளுமன்ற தேர்வுக்குழு என்ற திடீர் மாற்றத்தினால் தாமதமடைந்துவருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டுகிறது. அரசாங்கத்தின் இந்த இடையீடு குறித்து தம்மோடு அரசு பேசவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தம்மை பங்குபெறுமாறு அரசு வலியுறுத்தியிருந்ததாகவும் சுரேஷ் பிரேமசந்திரன் கூறினார். 'பெருமளவு அதிகாரத்தினை கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனேயே ஓர் அரசியல் தீர்வினை காணமுடியாதுள்ளபோது, தீவிரப்போக்குடைய கட்சிகளை உள்ளடக்கிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் எவ்வாறு தீர்வினை எட்ட முடியும். நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தீவிரப் போக்குடைய பல கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்குபெறவுள்ளனர். ஆகையினால் இது காலத்தினை இழுத்தடிக்கும் அரசின் தந்திரோபாயம்' என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. சுட்டிக்காட்டினார். ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டபடி இம்மாதம் 17, 18 மற்றும் 19ஆம் திகதிகளின் நடைபெறவிருந்த பேச்சு நடைபெறவில்லை. இதற்கான காரணத்தினையும் அரசு இதுவரை தெரிவிக்கவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பில் அரச தரப்பின் கருத்துக்களை பெறமுற்பட்டபோதும் அது சாத்தியமளிக்கவில்லை.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’