வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 20 ஜனவரி, 2012

இந்தியாவுடனான நல்லுறவைப் பேண வேண்டும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் முகமாக 2012ம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்திற்கு புறம்பாக ஆயிரம் கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
துரையப்பா விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை இன்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வு யாழ் பொதுநூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ்ப்பாணத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த சர்வதேச வர்த்தகக் கண்காட்சியூடாக இப்பகுதியின் வர்த்தக நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்படுவதுடன் அதனை வளர்த்தெடுப்பதற்கும் ஏதுவாக அமையும் என்பதுடன் இந்நிகழ்வு சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் அமைவதற்கு எனது முழுமையான பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் ஒத்தாசையையும் வழங்கியுள்ளேன். நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டக் கூடிய வகையில் பல கருத்துக்களைக் கூறியிருந்தார் என்பதுடன் அதற்கிணங்க இந்திய அரசு எமக்கு பல்வேறு உதவித் திட்டங்களையும் வழங்கி வருகின்றது. இந்தியாவுடன் நாம் நல்லுறைப் பேணி அதனூடாக யுத்தத்தால் அழிவடைந்த எமது பகுதிகளையும் எமது மக்களின் அபிவிருத்தியையும் மேலோங்கச் செய்வதற்கும் இந்தியா தொடர்ந்தும் பங்களிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார். இதன் ஒரு கட்டமாக யாழ் மாவட்டத்தின் வர்த்தகத் தொழிற்துறைகளை மேம்படுத்தும் முகமாகவும், அபிவிருத்தி செய்யும் முகமாகவும் இந்திய அரசு பல்வேறு கடன் உதவித் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வரும் நிலையில் இவற்றை சரியான முறையில் எமது வர்த்தகர்கள் பயன்படுத்தி வளமானதோர் எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். வடமாகாணத்தின் அபிவிருத்தி மற்றும் மேம்பாடு தொடர்பில் இலங்கை அரசும் பல்வேறு உதவித் திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதுடன் இதற்காக 2012ம் ஆண்டு வரவு செலவு நிதி ஒதுக்கீட்டிற்குப் புறம்பாக ஆயிரம் கோடி ரூபாவை ஒதுக்கீட செய்துள்ளதாகவும் இதனூடாக உள்ளூர் உற்பத்திகள் சிறுகைத்தொழில்கள் விவசாயம் உள்ளிட்ட தொழிற்துறைகள் மூலம் விரைவான அபிவிருத்தி நோக்கி பயணிக்க வேண்டுமெனவும் சுட்டிக் காட்டினார். இதனிடையே வர்த்தகர்கள் வர்த்தகத்துடன் மட்டும் நின்று விடாது மக்களது நலன்களை அபிவிருத்தி செய்வதற்கும் மேம்படுத்துவதற்கும் அக்கறையுடன் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். யாழ் வர்த்தக தொழிற்துறை சம்மேளனத் தலைவர் பூரணச் சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் மகாலிங்கம் உரையாற்றும் போது கடந்த 30 ஆண்டுகாலமாக யுத்தத்தால் வடமாகாணத்தில் பாதிக்கப்பட்ட மக்களினது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் இந்திய அரசு மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றது எனவும் இதன் பிரகாரம் விவசாயிகளுக்குத் தேவையான உபகரணங்கள் கைத்தொழிற்துறையை மேம்படுத்துவதற்கான உபகரணங்கள் மீனவர்களுக்கு தேவையான தொழில் உபகரணங்கள் உள்ளிட்டவற்றுடன் வீட்டுத் திட்டம், வீதி அபிவிருத்தி உள்ளடங்கலான மக்களின் வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்யவும் மேம்படுத்தவும் பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது எனவும் இவ்வாறான நடவடிக்கைகளில் தொடர்ந்தும் இந்திய பங்காற்றும் என்றும் உறுதிபடத் தெரிவித்தார். இதில் யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் ஆகியோரும் உரைநிகழ்த்தினர். இதன்போது இலங்கை வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் குமார மல்லவராச்சி துறைசார்ந்த பல்வேறு திணைக்களத்தைச் சேர்ந்தோரும் கலந்து கொண்டனர்.
















0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’