பிறந்த தேதி பிரச்சனையில் இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதி வி.கே.சிங்குக்கு ஆதரவாக தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. ராணுவ தலைமைத் தளபதி வி.கே.சிங்கின் பிறந்த நாள் விஷயத்தில் மத்திய அரசுக்கும் அவருக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. மெட்ரிகுலேஷன் சான்றிதழில், அவரது பிறந்த தேதி 1951ம் ஆண்டு மே மாதம் 10ம் தேதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ராணுவப் பணிக்காக அவர் மத்திய பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி நடத்திய ராணுவ அகாடமி தேர்வு எழுதியபோது வி.கே.சிங்கின் பிறந்த தேதி மே 10, 1950ம் ஆண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தேதியின்படி கணக்கிட்டால் வருகிற மே 31ம் தேதி அன்று வி.கே.சிங் ஓய்வு பெற வேண்டும். ஆனால், அவர் தனது பிறந்த தேதி 1951ம் ஆண்டு தான் என்று கூறி இதன்படி ஓய்வு பெற மறுத்து வருகிறார். அவரை மத்திய ஓய்வு பெறச் சொல்வதால், அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந் நிலையில், அவருக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. கிரேனேடியர்ஸ் அசோசியேஷன் என்ற அமைப்பு இந்த மனுவைத் தாக்கல் செய்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விஷயத்தில் வழக்கில் தொடர்பில்லாதவர்களின் மனுவை ஏற்க முடியாது என்று கூறி, அதை தள்ளுபடி செய்துவிட்டது. முன்னதாக நேற்று இந்த விவகாரம் குறித்து பாதுகாப்புத்துறை இணையமைச்சர் பல்லம் ராஜூவை வி.கே.சந்தித்துப் பேசினார். அப்போது, இந்த விவகாரத்தில் மத்திய அரசை நீதிமன்றத்துக்கு இழுத்தது சரியல்ல என்று சிங்கிடம் ராஜூ கூறியதாகத் தெரிகிறது. வரும் மே மாதம் 31ம் தேதி சிங் பதவி விலகினால், கிழக்கு மண்டல தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் பிக்ரம் சிங் தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றார். வி.கே.சிங் இப்போது விலகாமல் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் பதவி விலகினால், அதற்குள் பிக்ரம் சிங்கும் ஓய்வு பெற்றுவிடுவார். அப்போது கிழக்கு மண்டல ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கே.டி. பர்நாயக் தான் ராணுவத்தின் தலைமை தளபதியாக முடியும். மே 31ம் தேதிக்கு முன்னதாக வி.கே.சிங் நீக்கப்பட்டாலோ அல்லது பதவி விலகினாலோ, மேற்கு மண்டல ராணுவ தளபதி சங்கர் கோஷுக்கு அந்தப் பதவி கிடைக்கும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’