வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 20 ஜனவரி, 2012

ஓய்வுபெற்ற நீதிபதிகள் மூவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை


த்தியோகபூர்வ வாகனத்தை திருப்பிக் கொடுக்கத் தவறியதாக கூறப்படும் ஓய்வுபெற்ற நீதிபதிகள் மூவர் தொடர்பாக விசாரணை நடைபெறுவதாக கொழும்பு நீதவான் நீதிமன்றில் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினர் தெரிவித்தனர்.
இது தொடர்பாக ஏற்கெனவே புலனாய்வாளர்கள் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாகவும் இதன்படி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் குற்றப்புலனாய்வுப் பணியகத்தினர் நீவதான் ரஷ்மி சிங்கப்புலியிடம் நேற்று தெரிவித்தனர். ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.ரி. விக்னராஜா, ஓய்பெற்ற நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான சி.டி.என்.சில்வா, ஓய்பெற்ற நீதவானும் மேலதிக நீதிபதியுமான பி. கரலியத்த குணதிலக்கவும் தமது உத்தியோகபூர்வ வாகனங்களை மீள ஒப்படைக்கவில்லை என கொழும்பு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாகனங்களை கொள்வனவு செய்தமைக்காக நிதிக்கம்பனியொன்றுக்கு நீதியமைச்சு மாதாந்த தவணைக் கட்டணம் செலுத்திக்கொண்டிருப்பதகாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதியமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.கே.டி.டி. அரந்தர கொழும்பு குற்றப் புலனாய்வுப் பணியகத்திடம் இம்முறைப்பாட்டை செய்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’