வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 20 ஜனவரி, 2012

ஹைகோர்ப் வழக்கில் பெப்ரவரி 28 இல் தீர்ப்பு


முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவுக்கு எதிரான ஹைகோர்ப் வழக்கின் தீர்ப்பு பெப்ரவரி 28 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஷ முன்னிலையில் இவ்வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இந்த வழக்கும் இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வழக்கும் ஒரே விடயம் தொடர்பானதே என பொன்சேகாவின் வழக்குரைஞர் வாதாடினார். குற்றம்சாட்டப்பட்டவர் இதே குற்றச்சாட்டுக்காக இராணுவ நீதிமன்றத்தில் குற்றவாளியாக காணப்பட்டதாகவும் ஒரே குற்றத்திற்காக இரு தடவை தண்டிக்க முடியாது எனவும் எனவே மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்கிலிருந்து குற்றம்சுமத்தப்பட்டவர் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் அவ்வழக்குரைஞர் கூறினார். இந்நிலையில் இது தொடர்பான தீர்ப்பு பெப்ரவரி 28 ஆம் திகதி அறிவிக்கப்படும் என நீதிபதி கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’