மீள்குடியேற்றம் செய்யப்பட்ட வவுனியா பன்றிக்கெய்தகுளம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர்.
அண்மையில் மீள்குடியேற்றம் செய்யபட்ட இப்பகுதியில் தகர கொட்டகை அமைத்து விவசாயம் செய்து வந்த கந்தையா முத்தையா (வயது 67), அவரது மனைவி முத்தையா பரமேஸ்வரி ஆகிய இருவருமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தின்போது பெண்ணின் சடலம் வீட்டிற்கு அருகாமையிலும் அவரது கணவரின் சடலம் வீட்டில் இருந்து சுமார் 300 மீற்றர் தூரத்திலும் காணப்பட்டதாக கிராமசேவகர் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்ட இருவரது கைகளிலும் மோதிர விரல் வெட்டப்பட்டுள்ளதாக அப்பகுதி கிராமசேவகர் தெரிவித்தார். பலியானவர்களின் பிள்ளைகள் வவுனியா நகரத்தில் வசிப்பதாக தெரிக்கப்படுகின்றது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’