இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பிலும் ஏனைய பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பிலும் சந்தேகத்தின் பேரில் 14 பேர் நேற்று வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பொலிஸார் கூறினர்.
லிபெர்ட்டி சந்தைப் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் 6 பேர் கைதுசெய்யப்பட்ட அதேவேளை, குற்றவாளியான சமியுல்லா மற்றும் அவரது உதவியாளர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர். 2009ஆம் ஆண்டு பாகிஸ்தானின் லாகூர் நகரில் இலங்கை கிரிக்கெட் அணியின் வாகனத் தொடரணி மீது நடத்தப்பட்ட தாக்குதலின்போது பாகிஸ்தான் பொலிஸார் இருவர் பலியானதுடன், இலங்கை கிரிக்கெட் அணி வீரர் பலர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  












0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’