இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான அப்துல் கலாம் நாளை இலங்கை வரவுள்ளார்.
இலங்கை வரும் இவர் 21ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறும் மும்மொழி செயற்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளார். நாளை மாலை இலங்கை வரும் அப்துல் கலாம் மும்மொழித் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொள்ளவிருக்கும் அதேவேளை அன்றையதினம் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மாணவர்களைச் சந்தித்து அவர்கள் மத்தியில் கருத்துரை வழங்கவுள்ளார். இவரது அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் எதிர்வரும் 22ஆம் திகதி மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இலங்கை விஞ்ஞானிகள் பொறியியலாளர்கள் துறைசார் வல்லுனர்களுக்கான செயலமர்விலும் இவர் கலந்துகொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் உற்பத்தியை 2015ஆம் ஆண்டில் தற்போதிருக்கும் நிலையிலும் இரட்டிப்பாக்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில் இலங்கையில் மேற்கொள்ளப்படும் உற்பத்தியில் நவீன விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உச்ச திறன்கொண்ட உற்பத்தியை அதிகரித்து, ஏற்றுமதியை அதிகரிக்கச் செய்வது பற்றி அப்துல் கலாமுடன் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’