இரண்டு வருடங்களாக தடுத்துவைத்திருந்து புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் போராளிகளை இலங்கை அரசாங்கம் விடுவித்தபோது நடத்திய வைபவத்தில் கலந்துகொண்டு அவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கியமைக்காக விமர்சிக்கப்பட்ட ஓர் உயர்மட்ட இராஜதந்திரியும் முன்னாள் இலங்கைக்கான அவுஸ்திரேலியத் தூதுவருமான கதிகுளுக்மனுக்கு அவுஸ்திரேலியப் பிரதமர் ஜுலியா கில்லட் முக்கிய பதவியொன்றை வழங்கியுள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு 44 புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிக்கொண்டு சென்ற கப்பலை இடைமறித்த இலங்கையில் பாதுகாப்பு படைகளை பாராட்டியதற்காகவும் கதிகுளுக்மன் மனித ஆர்வலர்களால் விமர்சிக்கப்பட்டவர். கதிகுளுக்மன் தற்போது சர்வதேச திணைக்களத்தின் தலைமை அதிகாரியாக உயர்த்தப்பட்டுள்ளார். இந்த பதவி, ஆற்றல், திறமை என்பற்றின் அடிப்படையில் வழங்கப்பட்டது என பிரதமரின் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரியொருவர் கூறினார். இதேவேளை, இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகராக ரொபின் மூடி பதவியேற்பார் என வெளிவிவகார அமைச்சர் கெவின் ருட் அறிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’