வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 18 ஜனவரி, 2012

13வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டும்! எஸ்.எம். கிருஸ்ணா


லங்கையில் இனங்களுக்கிடையிலான நல்லுறவை மேம்படுத்துவதனூடாக 13வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டுமென்பதே இந்தியாவின் நிலைப்பாடாகும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு முன்பாக இன்றைய தினம் இடம்பெற்ற வடமாகாணத்தில் மீள்குடியமர்ந்த மக்களுக்கு இந்திய உதவித் திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் துவிச்சக்கர வண்டிகளை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் இந்த நிகழ்வில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி கொள்ளும் அதேவேளை யுத்த காலத்தின் போது தமிழ் மக்கள் அனுபவித்த அவலங்களையும் இன்னல்களையும் உணர்வுகளையும் இந்திய அரசு நன்கறியும். 2010ம் ஆண்டு நவம்பர் மாதம் நான் இங்கு வருகை தந்திருந்த போது இருந்த சூழலுக்கும் தற்போதுள்ள சூழலுக்கும் நிறைய வேறுபாடுகள் இரக்கின்றதென்பதுடன் இன்றைய அமைதியான நிலைமை நீடிக்க வேண்டும். இந்நாட்டில் எல்லா மக்களும் இன மத மொழி வேறுபாடுகளுக்கப்பால் நீடித்த நல்லுறவை மேம்படுத்துவது மிகவும் முக்கியமானது என்பதுடன் 13வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டுமென்பதே இந்தியாவின் நிலைப்பாடாகும் என்று சுட்டிக்காட்டினார். அத்துடன் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு 280 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியுடன் இந்திய அரசு வீடமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருவதுடன் இதனூடாக எதிர்காலத்தில் 49 ஆயிரத்துக்கும் அதிகளமான வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அயல்நாடு என்ற வகையில் இலங்கையின் அபிவிருத்தி மற்றும் மேம்பாடு தொடர்பிலும் பயனாளிகள் தெரிவிலும் நாம் மிகுந்த கவனம் செலுத்திவருகின்றோம் என்றும் குறிப்பாக யுத்தத்தால் பறிக்கப்பட்ட வடமாகாண மக்களின் வாழ்வு நிலையை மேம்படுத்துவதிலும் அக்கறை செலுத்தி வருகின்றோம் என்றும் தெரிவித்தார். இதனிடையே காங்கேசன்துறை துறைமுகப் பகுதியிலிருந்த யுத்த காலத்தின் போது சேதமடைந்த கடற்கலங்களின் பாகங்கள் இந்திய அரசால் 19 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் முழுமையாக அகற்றப்பட்டுள்ளதாகவும் இதன்மூலம் கப்பல் போக்குவரத்து மட்டுமல்லாமல் மீனவர்களும் சிறந்த பயன்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் சுட்டிக் காட்டினார். நிகழ்வில் காங்கேசன்துறைமுகம் கடற்கலங்களின் பாகங்களை அகற்றுவதற்கு பொறுப்பாகச் செயற்பட்ட அதன் தலைவர் ஜோசப் பரன் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம் . கிருஸ்ணாவுக்கு நினைவுப் பரிசினை வழங்கியதுடன் வடமாகாணத்தின் 05 மாவட்டங்களைச் சேர்ந்த பயனாளிகளில் ஒரு தொகுதியினருக்கு சம்பிரதாயப் பூர்வமாக துவிச்சக்கர வண்டிகளும் கையளிக்கப்பட்டன. நிகழ்வில் அமைச்சர் ஜி.எல்.பீரிஸம் உரை நிகழ்த்தினர். இந்த நிகழ்வு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதனிடையே இந்தியக் குழுவினர் யாழ்ப்பாணம் பொது நூலகத்துக்கு அண்மையாகவுள்ள கலாசார மண்டபம் அமையப் பெற்றவுள்ள இடத்தையும் புல்லுக் குளத்தையும் பார்வையிட்டதுடன் அவற்றை இந்திய அரசின் நிதியுதவியுடன் யாழ் மாநகரசபையின் கீழ் புனரமைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.























0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’