வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 12 ஜனவரி, 2012

அதிகமாக தேடப்படுவோர் பட்டியலில் 15ஆவது இடத்தை வகித்த தர்மபாஸ்கரன் செல்லத்தம்பி கனடாவில் கைது


மிக அதிகமாக தேடப்பட்டு வருவோரில் 15ஆவது இடத்தை வகிப்பவரும் இலங்கையருமான தர்மபாஸ்கரன் செல்லத்தம்பி என்பவர், கனடா, ரொறன்ரோ நகர பொலிஸாரால் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
பயங்கரவாத நடவடிக்கைகள், நிறுவனமயப்பட்ட குற்றச்செயல்கள் ஆகியவற்றில் ஈடுபடுவோரைக் கொண்ட புதிய பட்டியலை கனேடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் விக் தோவ்ஸ் வெளியிடுவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முனனரே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் குறிப்பிட்டார். இதேவேளை, குற்றச்செயல்களில் ஈடுபட்ட 15 பேர், அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிப்பதற்கு பொதுமக்கள் நல்ல ஆதரவு வழங்குவதாக கனேடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் விக் ரோவ்ஸ் தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களில் ஈடுபட்டுவிட்டு கனடாவில் ஒளித்து வாழும் 42 சந்தேகநபர்களின் பெயர்களை அந்நாட்டு குடிவரவு அமைச்சர் ஜேசன் கென்னி வெளியிட்டுள்ளார். இந்த 42பேரும் கனடா எல்லை சேவை முகவராண்மையால் தேடப்படுவோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’