வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 16 ஜனவரி, 2012

13 ஆவது திருத்தம் தொடர்பான இந்தியாவின் வலியுறுத்தலை இலங்கை ஏற்றுக்கொள்ள வேண்டும் - அமைச்சர் வாசு


லங்கையின் அரசியல் தீர்வுக்கு 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். கேட்பார் பேச்சைக் கேட்டு இந்தியாவுடனோ அல்லது இலங்கை வந்துள்ள எஸ்.எம். கிருஷ்ணாவுடனோ முரண்படுவது அர்த்தமற்ற செயலாகும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
தனி பௌத்த கொள்கைகள் நாட்டின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கப் போவதில்லை. எனவே ஜாதிக ஹெல உறுமய போன்றவர்களின் அரசியல் தீர்வுக்கான எதிர்ப்புகளானது வெறும் அரசியல் நோக்கங்களையே கொண்டது என்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தொடர்ந்தும் கூறுகையில், இனப்பிரச்சினைக்கான தீர்வாகவே 13 ஆவது திருத்தச் சட்டம் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டது. இதனை இந்தியா மற்றும் இலங்கை அரசாங்கங்கள் ஒப்பந்த ரீதியாக ஏற்றுக் கொண்டுள்ளன. கடந்த காலங்களில் நாட்டில் யுத்தம் காணப்பட்டமையால் தீர்வொன்றிற்கு செல்வது கடினமான விடயமாகவே இருந்தது. ஆனால் தற்போது அவ்வாறானதொரு சூழ்நிலை இன்றி நாட்டில் சுமூகமான சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே நிரந்தர அரசியல் தீர்வை ஏற்படுத்த ஏற்ற காலமாகத் தற்போதைய கால கட்டத்தை கூறலாம். இந்தியா இலங்கை வாழ் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்காக 13 ஆவது திருத்தச்சட்டத்தை வலியுறுத்துகின்றது. இதனை இலங்கை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் அரசியலமைப்பில் காணப்படுவதை நடைமுறைப்படுத்தி இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டியது அரசாங்கத்தின் கடமையும் பொறுப்புமாகும். 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஜாதிக ஹெல உறுமய போன்ற சிறு பிரிவினரே எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். இவ் எதிர்ப்புகளும் அடிப்படைத் தன்மையற்றவையாகும். இலங்கைக்கு தனி பௌத்தக் கொள்கைகள் ஒவ்வாது. மாறாக பல்லின சமூகங்களுககு ஏற்ற கொள்கைகள் அத்தியாவசியமானதாகவே உள்ளன எனறார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’