அரசாங்கத்துடன் இணைந்திருந்தால் மாத்திரமே அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியும். எதிர்காலத்தில் அரசியலை சிறந்த முறையில் திட்டமிடுவோமானால் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மேலும் பல அபிவிருத்திகளை கொண்டு வர முடியும் என்று மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
போரதீவுப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட பழுகாமம் பகுதியில் உள்ள மீள்குடியேற்ற கிராமமான விவேகானந்தபுரத்துக்கு மின்சார விநியோத்தை ஆரம்;பித்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். "இன்று வடக்கு, கிழக்கில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் திட்டமிட்ட அடிப்படையில் நடந்து வருகின்றன. இந்தப் பசுமையை பாதுகாத்துக்கொண்டு நாட்டை அபிவிருத்தி செய்தல் என்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும். முப்பது வருடங்களுக்கு முன்பு நாங்கள் யுத்தத்திற்குச் செல்லும்போது எதுவித பிரச்சினைகளும் இருக்கவில்லை. அன்றிருந்த அரசியல்வாதிகள் தான் தூண்டிவிட்டனர். பின் அவர்கள் வெளிநாட்டிற்கு ஓடிவிட்டனர். இருந்த இளைஞர்கள் யுத்தத்தில் அடிபட்டு துன்பத்தை சுமந்தனர். இராணுவ ஆட்சி நடப்பதாக சம்பந்தன் ஐயா பாராளுமன்றத்தில் கூறினார். நீங்கள் ஒரு சிறந்த அரசியல்வாதி. உங்களை நாங்கள் மதிக்கின்றோம். நீங்கள் ஏன் சிறு பிரச்சினைகளைப்பற்றி கதைக்கின்றீர்கள்? நாட்டின் தலைவராக இராணுவத்தளபதியை கொண்டு வருவதற்கு நீங்கள் வாக்களித்தீர்கள். இப்போது ஏன் மாற்றிப் பேசுகிறீர்கள். பாராளுமன்றத்தினால் வழங்கப்படும் அனைத்து வசதிகளையும் அனுபவித்துக்கொண்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு காலத்திற்குக் காலம் தங்கள் கதிரைகளை காப்பாற்றுவதற்காக பலர் அரசியல் செய்து வருகின்றனர். பாராளு மன்றத்தில் இருக்கின்ற அத்தனை வசதிகளையும் அனுபவித்துக்கொண்டு சந்தோசமாக இருக்கின்றார்கள். ஆனால், மக்களுக்கு அபிவிருத்தி வேண்டாம் என்கிறார்கள்" என அவர் மேலும் குறிப்பிட்டார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’