க ற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சிங்களவர்கள் தொடர்பில் எந்தவொரு விடயமும் சுட்டிக்காட்டப்படவில்லை.
இது அவ்வறிக்கையின் பாரிய குறைபாடாகும் என்று ஹெல உருமயவின் செயலாளரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க, தெரிவித்தார். இலங்கையில் சுமார் 21 ஆயிரம் சிங்களவர்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகள் இருப்பினும் அவர்கள் குறித்து நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் எதுவித விடயமும் உள்ளடக்கப்படவில்லை. அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் தமிழ், சிங்களம், முஸ்லிம்கள் என 9878 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவ்விடயம் தொடர்பிலும் ஆணைக்குழு அறிக்கையில் எவ்வித பரிந்துரையும் இணைக்கப்படவில்லை. இருப்பினும், ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கையிலும் பார்க்க இவ்வறிக்கை ஏற்றுக்கொள்ளத்தக்க விடயங்களை உள்ளடக்கியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பீ.டீ.பி.யினர் ஆயுதங்களை வைத்திருப்பதாக தங்களது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள நல்லிணக்க ஆணைக்குழு, அவர் எதற்காக ஆயுதம் ஏந்தினார் என்பது குறித்தோ அல்லது அவருக்கு ஏற்பட்ட அசாதாரண நிலைமைகள் குறித்தோ நல்லிணக்க ஆணைக்குழு சுட்டிக்காட்டவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’