2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு ஏழாவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
தேசிய பாதுகாப்புத்தினமான இத் தினத்தின் பிரதான வைபவம் காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதமர் டி.எம். ஜெயரட்ன பிதரம அதிதியாக கலந்துகொண்டார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். இந்த வைபவத்தில் தேசியக் கொடி, மற்றும் கிழக்கு மாகாணக்கொடி, மட்டக்களப்பு மாவட்டக் கொடி என்பன ஏற்றி வைக்கப்பட்டன. அத்துடன், சுனாமி உட்பட அனர்த்தங்களினால் உயிர்நீத்தவர்களுக்காக இரண்டு நிமிட நேர மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. முப்படை வீரர்களின் அணி வகுப்பு மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்களின் அணி நடை, பேன்ட் வாத்தியம் மற்றும் கலாசார நிகழ்வுகள் என்பனவும் இதன்போது இடம்பெற்றன. அத்துடன் மட்டக்களப்பு கல்லடி, நாவலடி, டச்பார் வீதி ,முகத்துவாரம், நாவலடி ஆகிய இடங்களில் இந்த அனுஷ்டிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன. இன, மத பேதமின்றி இந்நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ ஆலயங்களில் சமயப் பிரார்த்தனை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’