வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 26 டிசம்பர், 2011

யாழ்.நகரப் பகுதிக்கு அமைச்சர் விஜயம்



யாழ்.நகரப்பகுயில் அமைந்துள்ள புல்லுக்குளத்தை தூய்மை படுத்துவதுடன் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் மரங்களை நாட்டி அழகுபடுத்துவதற்கு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு யாழ்.மாநகர சபையிடம் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பணிப்புரை வழங்கியுள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
நகரப்பகுயிலுள்ள புல்லுக்குள பகுதிக்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அவர்கள் அக்குளத்தின் சுத்தம் சுகாதாரம் தொடர்பாக ஆராய்ந்தறிந்து கொண்டார். குறிப்பாக குளத்தில் வளர்ந்துள்ள சல்வீனியா என்னும் ஒரு வகை நீர்த்தாவரத்தை முற்றாக அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் அதேவேளை குளத்தை சூழவுள்ள பகுதிகளில் மரங்களை நாட்டுவதற்கு நடவடிக்கையெடுக்குமாறும் மணிக்கூட்டு கோபுர வீதியூடாக புல்லுக்குளம் சந்தி வரையான வீதியோரங்களை துரித வேகத்தில் சுத்தப்படுத்துமாறும் யாழ் மாநகர சபையின் துறைசார்ந்தவர்களி;டம் பணிப்புரை வழங்கினார். இதனிடையே தியேட்டர் பகுதிக்கும் - மணிக்கூட்டு கோபுர சந்திக்கும் இடைப்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்ட தற்காலிக கடைத்தொகுதிகளை முற்றாக அகற்றி அப்பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கான பஸ் போக்குவரத்து குறித்து அமைச்சர் அவர்கள் ஆராய்ந்தார். இதன்போது யாழ்.மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா யாழ்.மாநகர பொறியியலாளர் கெண்டர்சன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.












0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’