யாழ்.மாவட்டத்தில் இளம் வயது கர்ப்பங்கள் அதிகரித்துச் செல்லும் அதேவேளை, திருமணமாகாமல் இதுவரை 114 பெண்கள் கர்ப்பமடைந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை புள்ளி விபரங்கள் தெரிவிப்பதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் கூறியுள்ளார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
இதுத் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்.மாவட்டத்தில் பதின்மர் பருவத்தில் 346 பெண்களும் திருமணப் பதிவுகள் எதுவும் செய்யப்படாமல் 114 பெண்களும் கர்ப்பம் தரித்துள்ளனரென குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பிரதேச வாரியாக பதின்மர் வயதுக் கர்ப்பங்கள், திருமணமாகாமல் கர்ப்பம் தரித்தவர்களின் விபரங்களையும் வெளியிட்டுள்ளார்.
18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு கிரமப்புரங்களில் முறையான பாதுகாப்பு, போதியளவான அறிவின்மையே இதற்கு காரணம் எனவும் உடனடியாக இதுதொடர்பிலான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’