வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 7 டிசம்பர், 2011

இலங்கையின் 20 நிறுவனங்களுக்கு விரைவாக பிரித்தானிய விஸா


பிரிட்டனுடன் தொடர்ச்சியாக வர்த்தகத்தில் ஈடுபடும் இலங்கையின் தெரிவுசெய்யப்பட்ட சில குறிப்பிட்ட வணிக நிறுவனங்களிளன் அங்கத்தவர்களுக்கு விரைவாக விஸா வழங்குவதற்கான திட்டமொன்றை இன்று ஆரம்பித்துள்ளதாக கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தில் அங்கத்தவர்களாகுமாறு 20 நிறுவனங்களின் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்த இந்நிறுவனங்களின் அங்கத்தவர்களுக்கு விரைவாக விஸா வழங்குவதற்கான ஏற்பாடுகளை பிரித்தானிய எல்லை முகவரகம் மேற்கொள்ளும். இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜோன் ரன்கின் இது தொடர்பாக கூறுகையில், இச்சேவை இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டதையிட்டு நான் மகிழ்ச்சியடைந்துள்ளேன். இப்பரீட்சார்த்த திட்டமானது, பிரிட்டனில் முதலீடு செய்துள்ள அல்லது அடிக்கபடி வர்த்தக ரீதியான பயணங்களை அடிக்கடி மேற்கொள்ளும் ஊழியர்களைக்கொண்ட இலங்கைக் கம்பனிகளுக்கு நேரடியாக உதவும் நோக்குடையதாகும் எனத் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’