நாட்டில் உயர் தரக் கல்வியைக் கொண்ட தனியார் பல்கலைக்கழகங்களை நிர்வகிப்பதற்காக ஜனவரி மாதம் பாராளுமன்றத்திற்கு சட்டமூலமொன்றைக் கொண்டு வரவுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்தார். பேராதனை மற்றும் ருகுணு பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகளை நிறுத்தக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்றும் அமைச்சர் சொன்னார். கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை உயர் கல்வி அமைச்
சின் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க இதனைத் தெரிவித்தார். அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நாட்டில் கடந்த 9 வருடங்களாக 29 தனியார் பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே அரசாங்கம் ஏதோ புதிதாக தனியார் பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்கப் போவதாக சிலர் எதிர்ப்புக்களை வெளியிடுகின்றனர். தற்போது இயங்கி வரும் தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி தரம் மிக்கதாக இல்லை. 6 மாதம்இ 3 மாதம்இ 1 மாதம் என்ற அடிப்படையில் டிப்ளேõமா சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. இவ்வாறானதோர் நிலைமையை இல்லாதொழித்து தரம் மிக்க கல்விக்கு வித்திடும் நோக்கில் உயர் கல்வி அமைச்சின் கீழ் தனியார் பல்கலைக்கழகங்கள் கொண்டு வரப்படவுள்ளன. எதிர்காலத்தில் நாட்டில் வெளிநாட்டு தனியார் பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்ககப்படவுள்ளது. இதன் மூலம் எமது மாணவர்களுக்கு புலமைப் பரிசில்களை வழங்கி அப்பல்கலைக்கழகங்களில் கற்பதற்கு வாய்ப்பளிக்கப்படும். எமது பிள்ளைகளுக்கு அதிகளவில் பல்கலைக்கழகங்களுக்கான வாய்ப்புக்களை வழங்க முடியும். தனியார் பல்கலைக்கழகங்களின் கல்வித் தரம்இ நிர்வாகத்தை கண்காணித்தல் போன்றவற்றை உள்ளடக்கிய சட்ட மூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் பாராளுமன்றத்தில் இச்சட்ட மூலம் சமர்ப்பிக்கப்படும். பகிடி வதை கொழும்பு மற்றும் நாட்டிலுள்ள 15 பல்கலைக்கழகங்களில் பகிடிவதைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இப் பல்கலைக்கழகங்கள் மாணவர்களின் கட்டுப்பாட்டின் கீழேயே இருந்தது. தற்போது இந்த நிலைமை மாறியுள்ளது. பல்கலைக்கழக நிர்வாகத்தினரே நிர்வகிக்கின்றனர். ஆனால் பேராதனை ருகுணு பல்கலைக்கழகங்களில் பகிடிவதை தொடர்கின்றது. இதனை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இப்பல்கலைக்கழகங்களில் பகிடிவதையை எதிர்க்கும் மாணவர்களுக்கு விடுதிகளில் தங்க முடியாது. சிற்றுண்டிச்சாலை நூலகம் மற்றும் நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியாது. மாணவர்கள் சங்கங்கள் எனக் கூறிக் கொள்வோர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அண்மையில் மாத்தறை பல்கலைக்கழக மாணவி பகிடிவதைக்கு உள்ளாகி கால்கள் செயலிழந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோன்று பேராதனை பல்கலைக்கழக மாணவரொருவர் கொடூரமான பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்டு மன நிலை குழம்பிய நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவ்வாறான ஈனச் செயல்களுக்கு இடமளிப்பதா? மனிதாபிமான நடவடிக்கை மூலம் பயங்கரவாதத்தை ஒழித்தது போல் பல்கலைக்கழகங்களிலும் பகிடிவதை பயங்கரவாதம் ஒழிக்கப்படும். ஆங்கில மொழி பாடத் திட்டம் பல்கலைக்கழகங்களில் அனைத்து பாடத் திட்டங்களும் ஆங்கில மொழி மூலம் மேற்கொள்வதற்கான துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ் சிங்கள மொழி மூலம் பட்டப்படிப்பை மேற்கொள்வதால் நன்மைகள் கிடைக்கப் போவதில்லை. பாடத்திட்டங்கள் ஆங்கில மொழி மூலம் மேற்கொள்ளப்படுவதன் மூலம் சர்வதேச அங்கீகாரத்தை பெற முடியும் என்றார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்னஇ பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்க உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’