வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 28 டிசம்பர், 2011

வெள்ள பாதிப்புக்களை தடுக்க புதிய ஆண்டில் நிரந்தர திட்டம் - ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் தெரிவிப்பு


யுத்த பாதிப்புக்களிலிருந்து மீண்டு நம்பிக்கையோடு மீள்குடியேறியுள்ள எமது மக்கள் வெள்ளத்தாலும் பாதிக்கப்படுவது துரதிஸ்டமானது எனவேதான் 2012 ஆம் ஆண்டு முதல் வெள்ளப்பாதிப்புக்கள் ஏற்படாதவகையில் நிரந்தர திட்டம் ஒன்றை வகுத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான மு.சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்றைய தினம் (27) கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் அனர்த்த பாதிப்புகளுக்குள்ளான கிளிநொச்சி முல்லைத்தீவு மக்களுக்கு நிவாரணம் மற்றும் வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் சாதாரண மழைக்கும் எமது மக்கள் வெள்ளப்பாதிப்புகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர் எனவேதான் இந்த நிலைமை தொடர்ந்தும் நீடிக்கவிடாது ஒரு நிரந்தர தீர்வுக்கு செல்ல வேண்டிய தேவை உணரப்பட்டதன் விளைவாகவே அடுத்த ஆண்டு முதல் சீரான வடிகால் அமைப்பு தொடர்பில் மாவட்டம் தழுவிய வகையில் ஒரு பொதுவான கருத்திட்டத்தின் மூலம் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். இம்முறை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்றைய தினம் எம்மால் உலருணவுகள் ஒருவார காலத்திற்கு வழங்கப்பட்டது இதனை மேலும் ஒரு வார காலத்திற்கு வழங்கவேண்டும் என அமைச்சர் மகிந்த அமரவீர அவர்களிடம் கோரிக்கை விடுத்து போது அவர் உடனடியாகவே அதனை ஏற்று அவரின் செயலாளரின் மூலம் அரச அதிபருக்கு பணிப்புரை விடுத்தமை மகிழச்சியான விடயம். எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் எமது பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட எம் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கியமைக்காக எமது மக்கள் சார்பாக அவருக்கு நன்றிகளை தெரிவிப்பதாகவும் கூறினார். இங்கு உரையாற்றிய அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் சநதிரகுமார் அவர்களுடன் இணைந்து இப்பிரதேச மக்களுக்கு உதவுவதில் நாம் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம் அத்தோடு பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் இப்பிரதேச மக்களின் தேவை தொடர்பாக எம்மிடம் அடிக்கடி கோரிக்கைகளை முன்வைத்து வருபவர் அந்த வகையில் அவரின் வேண்டுகோளுக்கிணங்க இன்றைய இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். இன்றைய நிகழ்வில் கிளிநொச்சியை சேர்ந்த எட்டு பயனாளிகளுக்கும் முல்லைத்தீவைச் சேர்ந்த ஏழு பயனாளிகளுக்கும் ஒவ்வொன்றும் பத்தொன்பது இலட்சம் ரூபா பெறுமதியான தூவல் நீர்பாசன தொகுதி உபகரணங்களும் இயந்திரங்களும் வழங்கப்பட்டன. அத்தோடு 2010 ஆம் ஆண்டு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நட்டஈடு வழங்கும் நிகழ்வினையும் ஆரம்பித்து வைத்தார் இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் மரீனா முகமட் கிளிநொச்சி முல்லைத்தீவு அரச அதிபர்களான திருமதி ரூபவதி கேதீஸ்வரன் திரு.வேதநாயகன் மற்றும் பிரதேச செயலர்கள் அரச அதிகாரிகள் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.




















0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’