இ'லங்கையின் கொலைக்களங்கள் எனும் வீடியோ ஆவணத்தை ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பாங்கீ மூன் பார்வையிட்டார் என அவரது அலுவலக பேச்சாளர் இன்னர் சிற்றி பிரஸ்ஸுக்கு நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பாங்கீ மூன் மேற்படி வீடியோ ஆவணத்தை பார்வையிடவில்லை என அவரின் பேச்சாளர் பல மாதங்களாகக் கூறி வந்தார். ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜயமொன்றின் போது பான் கீ மூன் குறித்த வீடியோ ஆவணத்தை பார்வையிட்டுள்ளார் என்று ஐ.நா. இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதி பாலித கோஹன தெரிவித்ததை தான் படம் பிடித்ததாகவும் இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட வீடியோ காட்சியை பார்வையிட்டாரா? என வினவியதற்கு, இலங்கையின் கொலைக்களங்கள் காட்சியை பார்வையிட்டார். இதேவேளை, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்ந்து கொண்டிருக்கிறுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், பான் கீ மூன் இந்த கொலைக்களங்கள் ஆவணப்படத்தைப் பார்த்தாரா? இல்லையா? என்று அவரின் பெச்சாளர் மாட்டின் நேசிர்கியிடம் இன்னர் சிற்றி பிரஸ் கேட்டிருந்தது. அதற்கு அவர் 'ஆம்' என பதிலளித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’