வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 29 டிசம்பர், 2011

யாழ்.ஓஸ்மானியா கல்லூரியின் தேவைகள் தொடர்பில் அமைச்சர் அவதானம்

யாழ்.ஓஸ்மானியாக் கல்லூரியின் அதிபர் நியமனம் உட்பட பல்வேறு தேவைகள் தொடர்பில் விஷேட கலந்துரையாடலொன்று இன்றைய தினம் (28) பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் இடம்பெற்றது.
யாழ்.மாநகர சபை உறுப்பினர் சுபியான் மற்றும் யாழ்.முஸ்லிம் மக்களது கல்விச் சமூகம் சார்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்ட இக் கலந்துரையாடலில் யாழ்.முஸ்லிம் மக்களின் கல்வித்துறை நிலைப்பாடுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன. பல்வேறு தேவைகளுக்கு முகங்கொடுத்திருக்கும் யாழ்.முஸ்லிம் மக்களின் கல்வித்துறை உட்பட அனைத்துத் துறைகள் சார்ந்தும் உரிய அவதானஞ் செலுத்தப்பட்டு சாதகமான தீர்வுகள் எட்டப்படுமென இதன் போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் அவர்கள் வெகுவிரைவில் மேற்படி கல்லூரியின் தேவைகளை நிறைவேற்றுவதாகவும் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’