கையடக்கத் தொலைபேசியில் ஆபாச வீடியோக் காட்சிகளை பதிவிறக்கம் செய்து வைத்திருந்தாரென்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட இளைஞரொருவர் கொழும்பு பதில் நீதவானால் 100,000 ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞர் வீதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடியதைத் தொடர்ந்து கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார். குறித்த இளைஞரின் கையடக்கத் தொலைபேசியிலிருந்து 15 ஆபாச வீடியோக் காட்சிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் பொலிஸார் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’