வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 20 டிசம்பர், 2011

கொழும்பு கோட்டையில் தேசிய கைப்பணிப் பொருட்கள் காட்சி விற்பனை அறை! அமைச்சர் திறந்து வைத்தார்


தேசிய அருங்கலைகள் பேரவையினால் கொழும்பு கோட்டைப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேசிய கைப்பணிப் பொருட்களின் காட்சி மற்றும் விற்பனை நிலையத்தை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் திறந்து வைத்ததுடன் அதன் விற்பனை நடவடிக்கைகளையும் சம்பிரதாயப் பூர்வமாகத் தொடக்கி வைத்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
கொழும்பு கோட்டைப் பகுதியில் அமைந்துள்ள பழைய டச் வைத்தியசாலை கட்டிடத்தில் இந்நிலையம் அமைந்துள்ளது. இவ் விற்பனை நிலையத்தில் மரம் ஒலை மட்பாண்டம் துணி தும்பு மற்றும் உலோகம் சார்ந்த ஆக்கப் பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டிலிருந்து வரும் உல்லாசப் பயணிகளை கவரும் விதத்தில் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இப்பொருட்களின் விற்பனைக் கூடாக கிடைக்கப் பெறும் வருமானம் கைப்பணிப் பணியாளர்களது நலன்சார்ந்த விடயங்களுக்காகப் பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி உரையாற்றும் போது தேசிய அருங்கலைகள் பேரவையூடாக கைப்பணிப் பொருட்கள் சார்ந்த ஆக்கங்கள் நவீனப்படுத்தப்படும் அதேவேளை, உல்லாசப் பயணிகளை கவரும் வகையிலும், துறைசார்ந்தவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதைக் கருத்தில் கொண்டுமே இந்நிலையம் அமைக்கப்பட்டுள்ளதெனவும் வாழ்வெழுச்சியை முன்னிறுத்தியதாக தேசிய அருங்கலைகள் பேரவையூடாக மகிந்த சிந்தனையின் அடிப்படையிலேயே இது அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார். அங்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உரையாற்றும் போது தேசிய அருங்கலைகள் பேரவையினால் அமைக்கப்பட்டுள்ள இந் நிலையமூடாக கிடைக்கப் பெறுகின்ற வருமானம் கைப்பணித்துறைசார்ந்தவர்களது நலத்திட்டங்களுக்கு முற்றுமுழுதாகப் பயன்படுத்தப்படும் எனத் தெரிவித்தார். இன்றைய நிகழ்வில் அமைச்சரின் ஆலோசகர் திருமதி வி. ஜெகராசசிங்கம் தேசிய அருங்கலைகள் பேரவைத் தலைவர் புத்திகீர்த்திசேன அதன் பணிப்பாளர் பூலோகசிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

























0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’