தங்காலைச் சம்பவத்தில் பிரித்தானிய பிரஜை படுகொலை செய்யப்பட்டமை மற்றும் அவரது காதலியான ரஷ்ய யுவதி மீதான மோசமான தாக்குதல் ஆகியவை மிகவும் பாரதூரமானவையென தெரிவித்துள்ள பிரித்தானிய அரசாங்கம், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் கூறியுள்ளது.
தங்காலை சம்பவம் தொடர்பில் இலங்கைக்கான பிரித்தானிய பதில் உயர்ஸ்தானிகர் ரொபி புலொச் மேலும் கூறியுள்ளதாவது, தங்காலையில் பிரித்தானிய பிரஜையொருவர் கொல்லப்பட்டமை மற்றும் அவரது காதலியான ரஷ்ய யுவதி மீதான மோசமான தாக்குதல் ஆகிய சம்பவங்கள் மிகவும் பாரதூரமானவை. இந்த சம்பவங்கள் தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் தனது முழுமையான கவனத்தை செலுத்தியுள்ளது. அத்துடன் இலங்கையின் வெளிவிவகார அமைச்சுடன் இது தொடர்பில் பேசப்பட்டும் வருகின்றது. சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். இது தொடர்பில் முழுமையான விசாரணையொன்று நடத்தப்படுமென இலங்கையின் வெளிவிவகார அமைச்சு உறுதியளித்திருக்கின்றது. எனவே குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவர் என்ற நம்பிக்கை இருக்கின்றது. இச்சம்பவம் தொடர்பில் பிரித்தானிய பிரஜையின் குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’