வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 28 டிசம்பர், 2011

கூட்டமைப்பின் பின்னால் அன்று புலிகள், இன்று புலம்பெயர் தமிழர்களாம்!


மிழீழ விடுதலைப் புலிகளால் முன்னர் இயக்கப்பட்டு வந்த தமிழத் தேசியக் கூட்டமைப்பு இன்று புலம்பெயர் தமிழர்களால் இயக்கப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ ஊடகம் ஒன்றுக்கான பேட்டியின் போது தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரசியல் தீர்வுத் திட்ட தாமதம் குறித்து என் மீது குற்றம் சுமத்துவதில் அர்த்தமில்லை, தமிழ்த் தரப்பினரே தீர்வுத் திட்ட கால தாமதத்திற்கு பொறுப்பு சொல்ல வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு திட்டம் முன்வைப்பதில் ஏற்பட்டுள்ள கால தாமத நிலைமைக்கு தமிழர்களே பொறுப்பு சொல்ல வேண்டும்.புலம்பெயர் மற்றும் இலங்கை வாழ் தமிழ் மக்களே தீர்வுத் திட்டம் கால தாமதமாவதற்கு காரணம். பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். அரசியல் தீர்வுத் திட்டமொன்றை பெற்றுக் கொள்வதற்கான மெய்யான நோக்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்க வேண்டியது அவசியமானது. எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கான தமது பிரதிநிதிகளை இன்னமும் பெயரிடவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எவருக்கோ அஞ்சி செயற்படுகின்றார். நாங்கள் இதைச் செய்யவில்லை, அதைச் செய்யவில்லை என அமெரிக்காவிடம் சென்று கூட்டமைப்பினர் முறைப்பாடு செய்கின்றனர். பிரபாகரனின் காலத்தில் புலிகளினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழிநடத்தப்பட்டது, தற்போது புலம்பெயர் தமிழர்களினால் வழிநடத்தப்படுகின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.இரண்டாம், மூன்றாம் தலைமுறைகளைச் சேர்ந்த தமிழ் சமூகத்தினால் புலம்பெயர் சமூகம் வழிநடத்தப்படுகின்றது. இலங்கையில் அரசியல் தீர்வுத் திட்டம் எட்டப்பட்டு விட்டால் புகலிடம் கோரியுள்ள நாடுகள் அவர்களை மீள இலங்கைக்கு அனுப்பி விடும் என்ற அச்சத்தினால் புலம்பெயர் தமிழர்கள் செயற்படுகின்றனர்.எனவும் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’