இலவசக் கல்வி முறைமை அறிமுகப்படுத்துவதற்கான யோசனை முன் வைக்கப்பட்ட போது அது தமிழ் சமூகத்திற்கு தேவையில்லை எனக் கூறியவர்கள் அரசியல் தலைவர்கள் சிங்களத் தலைவர்கள் அல்லர், தமிழ் மக்களின் அரசியல் தலைவராக இருந்த ஜீ.ஜீ.பொன்னம்பலம்தான் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
நல்லையா மாத்திரமே இத்திட்டத்தை ஆதரித்தாகவும் அவர் கூறினார். வாழைச்சேனை பேத்தாளை சந்திரகாந்தன் வித்தியாலயத்தின் முதலாவது மாணவர் ஊக்குவிப்பு விழா பேத்தாளை குகநேசன் கலாசார மண்டபத்தில் நடைபெற்றபோதே முதலமைச்சர் சந்திரகாந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், "இலவசக் கல்வியை ஏன் எதித்தார்கள் என்றால் நம்மில் படித்தவர்கள் வரக் கூடாது என்பதற்காகதான். இன்று இலவசக் கல்வி முறைமை வந்ததன் காரணமாகத்தான் நமது பிரதேச பிள்ளைகள் கல்வி கற்கிறார்கள். இலவசக் கல்வி இல்லையென்றால் அதிகமானவர்கள் கற்கமாட்டார்கள். ஆரம்பத்தில் அதிகமான கல்வியியலாளர்கள் உருவாகாததற்குக் காரணம் எங்களுடைய பகுதி கல்வியில் வளர்ச்சி அடையவில்லை என்பதே. அதை சாதகமாகப் பயன்படுத்தி யுத்தத்திற்கு ஆள் எடுக்கலாம் என்ற நிலைமை ஏற்பட்டது. கல்வி அறிவு குறைந்த மக்களை மிக விரைவாக உணர்ச்சிவசப்படுத்த முடியும். ஆக்ரோசமான எண்ணங்களை சொல்லி மிக விரைவாக துப்பாக்கி தூக்க வைக்க முடியும் என்று எமது தமிழ் தலைவர்கள் நினைத்தார்கள். இதுதான் கடந்த காலங்களில் நமது அரசியல் தலைமைகள் மக்களுக்குச் செய்த சேவை. இதை இன்றைய சமூகம் நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும். ஜீ.ஜீ. பொன்னம்பலத்துடன் சேர்ந்து அரசியல் செய்தவர்தான் தந்தை செல்வா. இப்படியான வரலாறுகள் தெரியாமல் தமிழரசுக் கட்சி நல்ல கொள்கையுடன் வந்த கட்சி என்று கூறிக் கொண்டு இன்னும் இன்னும் மக்களை ஏமாற்ற நினைப்பது கவலையான விடயம்" என்றார். வித்தியாலய அதிபர் கே.கதிர்காமநாதன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், கல்குடா வலயக் கல்வி பணிப்பாளர் சுபா சக்கரவர்த்தி, வாழைச்சேனை பிரதேச செயலாளலர் எஸ்.கிரிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’