2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு மோசடி தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து பின்னர் பிணையில் விடுதலையான இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் கருணாநிதியின் மகளுமான கனிமொழி இன்று வீடு திரும்பினார்.
இன்று சனிக்கிழமை பிற்பகல் 12 மணியளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்த கனிமொழிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதாகவும் கருணாநிதி நேரில் சென்று வரவேற்றதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், விமான நிலையத்தில் வைத்து கருத்து தெரிவித்துள்ள கனிமொழி, ”2ஜி வழக்கில் தன் மீது எந்த குற்றமும் இல்லை என்பதை நிரூபிப்பேன்” என்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார். அத்துடன், ”நீண்ட நாட்களுக்கு பின்னர் சென்னைக்கு திரும்புவதால் நான் மகிழ்ச்சியாக உள்ளேன். எனவேஇ இது எனக்கு மிகவும் முக்கியமான தருணம். பிணை கிடைத்துள்ளமையானது இந்த வழக்கில் ஏற்பட்டுள்ள முதல் முன்னேற்றம். இந்த வழக்கில் பிணை கிடைத்துள்ளதால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். எனினும் நான் குற்றமற்றவர் என்பதை நிரூபிப்பேன். இந்த வழக்கை சட்டப்பூர்வமாக எதிர்கொண்டு அதில் இருந்து வெளியே வருவேன்” என்று அவர் மேலும் கருத்து தெரிவித்துள்ளார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’