வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 3 டிசம்பர், 2011

குமரன் பத்மநாதனை கைது செய்ய இன்டர்போலுக்கு சென்னை நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது: ஜயலத்

.
யுதங்கள், வெடிமருந்துகளை பயன்படுத்தியமை, கிரிமினல் சதி, மற்றும் பயங்கரவாதம் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் பிரத ஆயுத கொள்வனவாளரான கே.பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனை கைது செய்வதற்கு சென்னை நீதிமன்றமொன்று இன்டர்போலிடம் பிடியாணையொன்றை பிறப்பித்திருந்தது என ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன நாடாளுமன்றத்தில் வியாழனன்று தெரிவித்தார்.
இத்தேடுதல் ஆணையின் பிரதியொன்றையும் வரவுசெலவுத்திட்ட விவாதத்தின்போது, ஜயலத் ஜயவர்தன, நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அண்மையில் தான் சென்னைக்கு விஜயம் செய்தபோது, இலங்கை அரசாங்கத்தின் காவலில் கே.பி. இருப்பது குறித்து சென்னை; பிரதி பொலிஸ் மா அதிபருக்கு தான் தெரிவித்ததாகவும் டாக்டர் ஜயலத் ஜயவர்தன கூறினார். 'இக்குற்றங்களில் சம்பந்தப்பட்ட ஒரு நபரை வைத்திருப்பது ஒரு குற்றமாகும் எனவும் அவர் கூறினார். எனினும் இப்பிடிவிறாந்து எப்போது பிறப்பிக்கப்பட்டது என ஜயலத் ஜயவர்தன எம்.பி. கூறவில்லை. இப்பிடிவிறாந்தில் கே.பியின் பெயர் தர்மலிங்கம் சண்முகம் குமரன் எனவும் அவரின் பிறப்பிடம் யாழ்ப்பாணம், காங்கேசன்துறை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆங்கிலம், பிரெஞ்சு, சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளை அவர் பேசக்கூடியவர் எனவும் தலைமயிரை பக்கவாட்டில் சீவியிருப்பது அவரின் அடையாளம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரன் பத்மநாதன் 2009 ஆம் ஆண்டு மலேஷியாவில் வைத்து இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தற்போது அவர், வடக்கு கிழக்கு புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி அமைப்பு (நேர்டோ) எனும் அமைப்பை ஸ்தாபித்து நடத்தி வருகிறார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’