வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 21 நவம்பர், 2011

ரணிலுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு! ஐ.தே.க. செயலரிடம் கையளிப்பு!


திர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகையொன்று ஐ.தே.க. செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கட்சி மறுசீரமைப்பு குழுவைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் இந்தக் குற்றப்பத்திரிகையை செயலாளரிடம் கையளித்துள்ளார். அதனை கட்சியின் ஆலோசனைச் சபையிடம் கையளிப்பதற்காக குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கட்சித் தலைவருக்கு எதிரான முறைப்பாடு கிடைத்திருப்பதாகவும் அதனை ஆலோசனைச் சபைக்கு சமர்ப்பிக்கவுள்ளதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க கொழும்பு பேஜ் இணையத்தளத்திற்குத் தெரிவித்திருக்கிறார். கடிதம் தொடர்பாக நான் எதுவும் செய்ய முடியாது. கட்சியின் ஆலோசனைச் சபைக்கு சமர்ப்பிப்பேன். அது தொடர்பாக எவ்வாறு செயற்படுவதென ஆலோசனைச் சபை தீர்மானிக்கும் என்று அவர் கூறியுள்ளார். இந்த விடயத்தை ஆலோசனைச் சபையும் செயற்குழுவுமே தீர்மானிக்க வேண்டுமென்று அவர் கூறியுள்ளார். ஆயினும் இந்த இரு அமைப்புக்களினதும் கூட்டம் விரைவில் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் இல்லையெனவும் அவர் தெரிவித்திருக்கிறார். கட்சித் தலைவருக்கு எதிரான முறைப்பாடானது குற்றப்பத்திரிகை அல்ல எனவும் கட்சி உறுப்பினர்களால் குற்றப்பத்திரிகைகள் சமர்ப்பிக்க முடியாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இளம் அரசியல்வாதிகள் பலரை தன்னினச்சேர்க்கை உறவுக்குட்படுத்த முயற்சித்ததாகவும் இந்த அதிருப்தியாளர்கள் குற்றம்சாட்டியிருப்பதாக "லக்பிம நியூஸ்' பத்திரிகை நேற்று ஞாயிற்றுக்கிழமை தலைப்புச் செய்தி வெளியிட்டிருந்தது. மாத்தறை மாவட்ட ஐ.தே.க. எம்.பி. புத்திக பத்திரனவை தன்னினச் சேர்க்கை உறவுக்கு ரணில் விக்கிரமசிங்க முயற்சித்திருந்ததாகவும் "அதற்கு எம்.பி. மறுத்த போது பத்திரன கட்சி உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டதாகவும் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாக "லக்பிம நியூஸ்' தெரிவித்துள்ளது. ஐ.தே.க.வின் தென்மாகாண சபை உறுப்பினர் மைத்திரி குணரட்ணவினால் கடந்த வாரம் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக 20 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய ஆவணம் கையளிக்கப்பட்டிருந்தது. ஐ.தே.க. பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான மறுசீரமைப்புக்காதரவான குழுவின் உறுப்பினராக குணரட்ண உள்ளார். பிரதித் தலைவர் கரு ஜயசூரியவிடம் கட்சித் தலைமைப் பொறுப்பை ரணில் கையளிக்க வேண்டுமென மறுசீரமைப்புக்கு ஆதரவான குழுவினர் வலியுறுத்தி வருகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’