கட்சி பேதங்களுக்கு அப்பால் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகத் தெளிவாகப் போராடி வருகின்ற ஒரேயொரு அமைச்சர் என்றால் அது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மட்டுமே என இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதமர் தி.மு ஜயரட்ன அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்றைய தினம் (19) இடம்பெற்ற மாவட்டத்தின் சமய நிறுவனங்களை மேம்படுத்தல் செயற்றிட்டத்திற்காக காசோலைகளை வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் இந்நாட்டில் வாழ்ந்து வருகின்ற தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் எவ்விதமான வேறுபாடுகளும் இன்றி சமத்துவமாக வாழ வேண்டுமென்பதற்காகவே வடக்கு கிழக்கு பகுதிகளில் யுத்தத்தால் சேதமடைந்த சமய நிறுவனங்களை மட்டுமல்லாது நாட்டிலுள்ள பல்வேறு பகுதிகளிலுள்ள சமய நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன என்பதுடன் இன மத மொழி வேறுபாடுகளுக்கப்பால் இந்நாட்டை அபிவிருத்தி செய்வதே எமது நோக்கமாகும். பல்வேறு இனங்களைக் கொண்டதுதான் ஒரு நாடாக இருக்க முடியும் என்பதற்கிணங்க இலங்கையும் அப்படியானதொரு நாடு என்பதுடன் இனங்களும் மதங்களும் மோதிக் கொள்ளும் போதுதான் பேரழிவுகள் ஏற்படுகின்றது. மதங்களின் அடிப்படையில் அதுசார்ந்த மக்களின் கலை கலாசார பண்பாட்டு விழுமியங்கள் பேணப்பட வேண்டுமென்பதுடன் அப்போது தான் எவ்விதமான பிரச்சினைகளும் இன்றி அமைதியாகவும் சந்தோசமாகவும் வாழ முடியும். இந்நாட்டில் வாழுகின்ற அனைத்து இன மக்களும் ஐக்கியமாகவும் நிம்மதியாகவும் வாழ வேண்டுமென்பதையே ஜனாதிபதி அவர்கள் விரும்புவதாக சுட்டிக்காட்டிய பிரதமர் அவர்கள் அதற்காகவே குறிப்பிட்ட ஒரு மதத்திற்கோ குறிப்பிட்ட ஒரு இனத்திற்கோ உதவாமல் எல்லோருக்கும் பாகுபாடின்றி உதவி வருவதாகவும் குறிப்பிட்டார். இந்நாட்டில் வாழும் மக்கள் அச்சுறுத்தல்கள் இல்லாத சூழலில் வாழவே விரும்புகின்றனர். எனவே எல்லோரும் இணைந்து தான் இந்நாட்டிலுள்ள பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவேண்டும். அந்தவகையில் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும் அபிலாசைகளுக்காகவும் உரிமையுடன் போராடி வரும் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா அவர்களே விளங்கி வருகின்றார் என்று சுட்டிக்காட்டிய பிரதமர் அவர்கள் இதுவி;டயம் தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அடிக்கடி கலந்துரையாடி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இனம் என்பது ஒரு நிலையானது அல்ல மனித வர்க்கமே நிலையானது என்பதை மறந்து இன்றும் சில அரசியல் வாதிகள் தமது சுயலாப அரசியலில் ஈடுபட்டு வருகின்றமை வேதனையளிக்கின்றது. என்பதுடன் இதனால் இனப்பிரச்சினைக்கு சரியான வழியில் தீர்வு காண முடியாதுள்ளதாகவும் எல்லா இன மக்களும் அனைத்து உரிமைகளும் பெற்று ஐக்கியமாக வாழ வேண்டுமென்பதுடன் தமிழ் மக்களுக்கான உரிமைகள் தொடர்பில் அரசு மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். முன்பதாக கோட்டை முனீஸ்வரன் கோயிலில் சிறப்புப் பூசை வழிபாடுகளில் கலந்து கொண்ட பிரதமர் அவர்கள் யாழ்.வீரசிங்கம் மண்டபத்திற்கு வருகை தந்தார். இந்துசமய கலாசார அலவல்கள் திணைக்களப் பணிப்பாளர் சாந்தி நாவுக்கரசன் தலைமையில் நடைபெற்ற சமய நிறுவனங்களை மேம்படுத்தல் மற்றும் ஆன்மீக வளர்ச்சி தொடர்பான செயற்றிட்டம் நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி உரையாற்றியதைத் தொடர்ந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உரையாற்றினார். தொடர்ந்து இன்றைய நிகழ்வில் பிரதமரும் புத்தசாசன மற்றும் மதஅலுவல்கள் அமைச்சருமான தி.மு ஜயரட்ன அவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பொன்னாடை போர்த்தியும் மலர் கிரீடம் அணிவித்தும் கௌரவித்தார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் சந்திரசிறி பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் ஆகியோரின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த பிரதமர் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 240 ஆலயங்களுக்கு 25 மில்லியன் ரூபாவை அதற்கு பொறுப்பானவர்களிடம் கையளித்தார். இந்நிகழ்வில் ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினர்களான முருகேசு சந்திரகுமார் சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்) யாழ்.மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரச அதிபர் யாழ் மாநகர முதல்வர் ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கமலேந்திரன் உள்ளிட்ட மதகுருமார்கள் அரச உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’