வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 24 நவம்பர், 2011

அமைச்சின் செயற்திட்டங்கள் தொடர்பில் முன்னேற்ற ஆய்வு!

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழான நிறுவனங்களின் நடப்பாண்டு மற்றும் அடுத்த வருடத்திற்கான செயற்திட்டங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆராய்தறிந்து கொண்டார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
கொழும்பு மருதானையில் அமைந்துள்ள அமைச்சின் பிரதான மண்டபத்தில் அமைச்சர் அவர்களது தலைமையில் இன்றைய தினம் (24) இக்கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது அமைச்சின் கீழான தேசிய வடிவமைப்பு நிலையம் தேசிய அருங்கலைகள் பேரவை பனை அபிவிருத்திச் சபை வடகடல் சீநோர் நிறுவனங்கள் கைத்தொழில் அபிவிருத்திச் சபை ஆகியவற்றினது தலைவர்கள் பொதுமுகாமையாளர்கள் உள்ளிட்ட துறைசார்ந்தோரிடம் நடப்பாண்டில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் செயற்றிட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் மற்றும் அடுத்த வருடம் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் என்பன தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. தேசிய வடிவமைப்பு நிலையம் சார்பாக அதன் தலைவர் ஜனதா மார்சல் தேசிய அருங்கலைகள் பேரவை சார்பாக அதன் தலைவர் புத்தி கீர்த்தி சேன பனை அபிவிருத்திச் சபை சார்பாக அதன் தலைவர் பசுபதி சீவரத்தினம் வடகடல் நிறுவனம் சார்பாக அதன் தலைவர் பரந்தாமன் கைத்தொழில் அபிவிருத்தி சபை சார்பாக அதன் தலைவர் உதயசிறி காரியவசம் ஆகியோர் தத்தமது நிறுவனங்களினது செயற்றிட்டங்கள் தொடர்பில் இதன் போது விளக்கமளித்தனர். நடப்பாண்டு மட்டுமல்லாமல் 2012 ம் ஆண்டு குறித்த நிறுவனங்கள் முன்னெடுக்க வேண்டிய வேலைத் திட்டங்கள் தொடர்பிலும் அந்தந்த நிறுவனங்களினது நவீனத்துவம் மற்றும் அபிவிருத்தி தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டதுடன் நடப்பாண்டில் மேற்படி நிறுவனங்கள் சார்ந்த உற்பத்திகள் விற்பனைகள் கண்காட்சிகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்திய அமைச்சர் அவர்கள் அடுத்தாண்டு ஒவ்வொரு நிறுவனங்களும் மக்களுக்கான சேவைகளைக் கருத்திற் கொண்டு தமது பணிகளை முழுமையாகவும் திறமையாகவும் முன்னெடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார். இன்றைய இக்கலந்துரையாடலில் பிரதியமைச்சர் வீரகுமார திஸ்ஸாநாயக்க அமைச்சர் அவர்களின் பிரத்தியேகச் செயலாளர் தயானந்தா அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி அமைச்சின் இணைப்பாளர் செல்வி தங்கேஸ்வரி ஆலோசகர் திருமதி வி.ஜெகராசசிங்கம் ஆகியோருடன் அமைச்சின் துறைசார்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.



























0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’