வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 24 நவம்பர், 2011

இறுதி யுத்தத்தில் உயிரிழந்த பொது மக்கள் தொடர்பில் இலங்கை முதல் முறையாக கணக்கெடுப்பு நடத்துகிறது


லங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தில் உயிரிழந்த பொது மக்கள் தொடர்பில் இலங்கை முதன்முறையாக கணீப்பீடு ஒன்றை மேற்கொண்டு வருவதாக பாதுகாப்பு உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி ஏபி செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை மீது யுத்தக் குற்றம் புரிந்ததாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது. இதேவேளை, இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தில் இராணுவ நடவடிக்கைகளால் சிறிய தொகுதி பொது மக்களே உயிரிழந்ததாக பாதுகாப்புச் செயலாளர் வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கூறியுள்ளார். இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தில் சுமார் 40000 பொது மக்கள் கொலை செய்யப்பட்டதாக ஐநா நிபுணர் குழு அறிக்கை தெரிவிக்கின்றது. அரச படைகளின் எரிகணைத் தாக்குதலுக்கு இலக்காகியே அதிக பொது மக்கள் உயிரிழந்ததாக ஐநா நிபுணர் குழு அறிக்கை குற்றம் சுமத்தியுள்ளது. இந்த அறிக்கையை கொண்டு சர்வதேச போர் குற்ற விசாரணை ஒன்றை நடத்துமாறு சர்வதேச நாடுகள் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புக்கள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் சரவ்தேச கல்வி, நட்புறவு நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ், இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தில் சிறிய தொகுதி பொது மக்களே உயிரிழந்ததாகக் கூறியுள்ளார். யுத்தத்தின் போது காணாமல் போனோர் மற்றும் உயிரிழந்தவர்கள் தொடர்பில் தகவல் திரட்டப்படுவதாகத் தெரிவித்த அவர், 30 வருடங்களின் பின் மேற்கொள்ளப்படும் சனத்தொகை மதிப்பீட்டின் ஊடாக அது கணிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’