வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 24 நவம்பர், 2011

சர்வதேச கிரிக்கெட் சபையின் தலைவரான இந்திய அமைச்சர் சரத் பவார் தாக்கப்பட்டார்


ந்திய மத்திய அமைச்சரும் சர்வதேச கிரிக்கெட் சபைத் தலைவருமான சரத் பவார் மீது நபர் ஒருவர் இன்று வியாழக்கிழமை தாக்கியுள்ளார். இந்திய தலைநகர் புதுடில்லியில் நடந்த வைபவமொன்றில் விவசாய நுகர்வோர் விவகார உணவு மற்றும் பொது விநியோக அமைச்சரான சரத் பவார் (71) பங்குபற்றியபோது அவரின் கன்னத்தில் இந்நபர் அறைந்தார்.
ஹர்வீந்தர் ராம் சிங் எனும் இந்பரே, ஊழல் வழக்கில்குற்றவாளியாக காணப்பட்ட முன்னாள் தொலைதொடர்புகள் அமைச்சர் சுக் ராம் மீதும் கடந்த சனிக்கிழமை தாக்குதல் நடத்தியதாக நம்பப்படுகிறது. சீக்கியரான அவ்விளைஞர், சீக்கியரகளின் ஆடையுடன் அணியும் சிறிய கத்தியொன்றையும் வைத்திருந்தார். தான் அமைச்சரவை அறைவதற்காக திட்டமிட்டு அங்கு வந்தாக அவர் கூறினார். இத்தாக்குதலினால் அமைச்சர் சரத் பவார் நிலை தடுமாறினாலும் பின்னர் சுதாகரித்துக் கொண்டு வைபவம் நடைபெற்ற இடத்திலிருந்து வெளியேறிச் சென்றார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சரத் பவார், இது முட்டாள்தனமான நடவடிக்கை எனக் கூறினார். அந்த இளைஞர் மீது வழக்குத் தொடரப்படுமா எனக் கேட்டபோது, 'அவ்விவகாரத்தை பொலிஸார் கையாள்வர்' என பதிலளித்தார். அவ்விளைஞர் ஊடகவியலாளர்கள் மத்தியில் இருந்ததை தான் கண்டதாகவும் பாதுகாப்பு குறைவாக இருந்த சூழலை அவர் சாதாகமாக பயன்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் பவார் கூறினார். இச்சம்பவம் குறித்து அமைச்சர் சரத் பவாருடன் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உரையாடியதுடன் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய அரசியல் கட்சிகள் பலவும் இதை கண்டித்துள்ளன. தாக்குதல் நடத்தியவர் தண்டிக்கப்பட வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி மற்றும் சமாஜ்வாதி கட்சி ஆகியன கூறியுள்ளன. எனினும் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்வது அவசியம் எனவும் அவை கூறியுள்ளன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’