நீண்டகால யுத்தப் பாதிப்புக்களை எதிர்கொண்ட எமது மக்களின் தேவைகளை உணர்ந்து பணியாற்றிவரும் அரச சார்பற்ற நிறுவனங்களின் சேவை பாராட்டுக்குரியது என ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்று (12) பளை கரந்தாயில சர்வோதய நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்துவைத்து உரை நிகழ்த்தும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் நீண்ட பெரும் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து பின் மீளக் குடியேறியிருக்கும் எம் மக்களின் தேவைகளை உணர்ந்து பல அரச சார்பற்ற நிறுவனங்கள் சேவையாற்றி வருகின்றன. அத்தோடு இம்மக்களுக்காக அரசாங்கம் முன்னெடுத்துவரும் பல்வேறு செயற்றிட்டங்களுக்கும் இவ் அரச சார்பற்ற நிறுவனங்கள் துணைபுரிந்து வருகின்றன. இதற்காக இந் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தி செயற்படுத்தும் நாடுகளின் அரசாங்கங்களுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் எமது மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவிக்கின்றேன். மேலும் மீள்குடியேற்றத்தின் பின்னர் நாம் எமது மக்களது மருத்துவத் தேவையினையும் கல்வித்துறையினையும் மேம்படுத்துகின்ற செயற்பாடுகளுக்கு அதி முக்கியத்துவம் கொடுத்துள்ளதுடன் அது சார்ந்த செயற்பாடுகளை விரைவுபடுத்தியும் வருகின்றோம். எமது இந்த ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கும் பல அரச சார்பற்ற நிறுவனங்கள் துணையாக செயற்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று கரந்தாய்ப் பகுதியில் இக்கிராமிய வைத்தியசாலையினை அமைப்பதற்கு துணைபுரிந்த ஜேர்மன் அரசாங்கத்திற்கும் அதனை நடைமுறைப்படுத்த உதவிய சர்வோதயம் நிறுவனத்திற்கும் நாம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் இவ் வைத்தியசாலையினை அமைப்பதற்குரிய காணியினை கொடையாக வழங்கிய மக்களின் நல்லெண்ண மனப்பாங்கும் போற்றுதற்குரியது என பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் மேலும் தெரிவித்தார். ஏழுபத்திரண்டு இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட இவ் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கரந்தாய் கிராமத்தைச் சேர்ந்த திருமதி. சாரதா திரு. கிருஸ்ணபிள்ளை திரு.மயில்வாகனம் ஆகியோர் தங்களுடைய காணிகளை அன்பளிப்புச் செய்திருந்தனர். இந் நிகழ்வில் ஜேர்மனிய தூதுவரகத்தின துனைத்தூதர் இன்னிக் மற்றும் மல்ரிசர் சர்வதேச நிறுவனத்தின் பிரதிநிதிகளான டானியல் பிறேக் பில்ட்வோல்டர் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் முகுந்தன் பிரதேச வைத்திய அதிகாரி மைதிலி சர்வோதய நிறுவனத்தின் திட்டப்பணிப்பாள் ரவீந்திர ஆரிய விக்கிரம மாகாண இணைப்பாளர் ஜீவராஜ் மாவட்ட இணைப்பாளர் கிறிஸ்ரீன்ராஜா முகாமையாளர் மனோஜ் ஆகியோரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதன் மற்றும் சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’