வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 13 அக்டோபர், 2011

ராஜ் ராஜரத்தினம்: 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை


லங்கையில் பிறந்த பெரும் செல்வந்தரான ராஜ் ராஜரத்தினத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. நீயுயார்க்கில் வசித்து வந்த ராஜ் ராஜரத்தினம் பங்கு சந்தையில் உள் வியாபாரம் செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற குற்றத்துக்கு வழங்கப்பட்ட அதிக கால தண்டனை இதுவேயாகும். முன்னணி நிறுவனங்களுக்குள் இருந்தவர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில், பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்ட ராஜ் ராஜரத்தினம் அதன் மூலம் 75 மில்லியன் டாலர்கள் வரை சம்பாதித்ததாக குற்றம்சாட்டப்பட்டது. கோல்ட்மேன் சாக்ஸ், இன்டேல், ஐபிஎம் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளை ராஜ் ராஜரத்தினம் வாங்கிவிற்றுள்ளார். இந்த தண்டனைக்கு எதிராக அவர் மேன்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’