தொடர்நது மக்களுக்கு எதிராக செயல்பட்டால் அவர்களே அதிமுக அரசை தூக்கி எறிவார்கள் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
புளியங்குடி நகராட்சி தலைவர் பதவிக்கு மதிமுக சார்பில் டாக்டர் சதன் திருமலைக்குமார் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ புளியங்குடியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய சதன் திருமலைக்குமார், புளியங்குடி நகராட்சி பகுதியில் விவசாயிகள் பயன்படுத்துவதற்காக பெரும்பாதை, பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் மற்றும் கூடுதல் கட்டிடங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்துள்ளார். இவரை நகராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் வெற்றி பெறச் செய்தால் மேலும் பல நல்ல திட்டங்கள் நகராட்சிக்கு கொண்டு வருவார். பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 7 ஆதி திராவிடர்கள் பரிதாபமாக இறந்தனர். ஒரு வனவிலங்கை கொன்றால் கூட பெரிய அளவில் தண்டனை கொடுக்கப்படும் நிலையில் 7 மனித உயிர்களை சுட்டு வீழ்த்திய போலீசார் யாரையும் அதி்முக அரசு சஸ்பெண்ட் செய்யவில்லை. அதற்கு மாறாக மறியல் போராட்டம் என்றால் இது போன்ற நிகழ்வு நடைபெறத்தான் செய்யும் என தமிழக அரசு சப்பை கட்டு கட்டுகிறது. இது மனித தன்மையற்ற செயலாகும். இதே போல் தொடர் சம்பவங்கள் நடந்தால் அதிமுக அரசை மக்கள் தூக்கி எறிவார்கள் என்றார்.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’