ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகளின் நடவடிக்கைகளில் இலங்கைப் படையினரும் பங்களிப்புச் செய்ய வேண்டும் என 2009 ஆம் ஆண்டு டிசெம்பரில் அமெரிக்கா விரும்பியதாகவும் ஆனால் அதற்கு இலங்கை மறுப்புத் தெரிவித்தாகவும் விக்கிலீக்ஸினால் கசியவிடப்பட்ட அமெரிக்காவின் இரகசிய ராஜதந்திர கேபிள் குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க ராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளேக்கிற்கும் இலங்கை பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் 2009 டிசெம்பர் 8 ஆம் திகதி நடைபெற்ற சந்திப்பின்போது இது குறித்து தெரிவிக்ப்பட்டதாகவும் அமெரிக்க கேபிள் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகளின் நடவடிக்களில் இலங்கை இராணுவம் பங்குபற்றுவது இராணுவங்களுக்கிடையிலான ஈடுபாட்டை முன்னே;றுவதற்கு குறிப்பிடத்தக்களவு உதவும் என ரொபர்ட் பிளேக் தெரிவித்தார். அதற்கு (கோட்டாபய) ராஜபக்ஷ பதிலளிக்கையில் இலங்கையில் தேர்தல் நடைபெறும் காலத்தில் தாக்குதல் நடவடிக்கைகளில் படையினரை ஈடுபடுத்துவது அரசியல் ரீதியில் மிக உணர்ச்சிபூர்வமாக அமையும் எனக் கூறினார். அத்துடன் இலங்கைத் துருப்புகளை வழங்கும்போது இலங்கையின் முஸ்லிம் சிறுபான்மையினரிடையே ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் அல் கயீடா மற்றும் லக்ஷர் ஈ. ஐதபா போன்ற குழுக்களின் ஆத்திரத்தை ஈர்க்க நேரிடும் ஆபத்து குறித்தும் இலங்கை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார் என அக் கேபிள் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’