வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 28 அக்டோபர், 2011

சில்ப 2011 தேசிய கண்காட்சியும் விற்பனைச் சந்தையும்!.


பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டுதலில் தேசிய அருங்கலைகள் பேரவை தேசிய வடிவமைப்புச் சபை கைத்தொழில் அபிவிருத்திச் சபை பனை அபிவிருத்திச் சபை மற்றும் வடகடல் நிறுவனம் ஆகியவற்றின் பங்களிப்புடன் கொழும்பு பண்டாநாயக்க ஞாபகார்த்த மண்டபத்திலுள்ள சிறிமாவோ பண்டாநாயக்கா ஞாபகார்த்த கண்காட்சிக் கூடத்தில் சில்ப 2001 கண்காட்சியும் விற்பனையும் இன்று (27) சம்பிரதாயப் பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்கள் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர்களாக சிரேஸ்ட அமைச்சர் அல்ஹாஹ் ஏ.எச்.எம் பௌசி உயர்கல்வி பிரதியமைச்சர் நந்திமித்திர ஏக்கநாயக்க பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் அஸ்வர் மற்றும் மேல்மாகாண சபை அமைச்சர் உதய கம்பன்பில ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் தலைமையுரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது உரை பின்வருமாறு. சில்ப 2011 - தேசிய கண்காட்சியும் விற்பனைச் சந்தையும் - எனது பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சினால் 4 நாட்களுக்கான ஒரு கண்காட்சியாக ஒக்டோபர் 27ம் திகதியிலிருந்து 30ம் திகதிவரை சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி மண்டபத்தில் இடம்பெறுவதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். இந்த கண்காட்சி காலை 10 மணியிலிருந்து மாலை 10 மணிவரை 4 நாட்களுக்கு இடம்பெறுகின்றது. இத் தேசிய கண்காட்சியில் கைப்பணியாளர்களினதும் சிறுதொழில் மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களினதும் 1500 மேற்பட்ட துறைசார்ந்த படைப்புக்களும் பொருட்களும் கண்காட்சிக்கு வைக்கப்படுகின்றது. மாகாண மட்டத்தில் நடாத்தப்பட்ட கைப்பணி மற்றும் கைத்தொழில் சார்ந்த போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டியவர்களின் படைப்புக்களும் பொருட்களும் இத்தேசிய கண்காட்சிக்கு கொண்டு வரப்படுகின்றது. அகில இலங்கையில் 9 மாகாணங்களில் இருந்தும் உள்ளூர் மூலப்பொருட்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட தரமான பொருட்களே இந்த கண்காட்சிக்கு கொண்டுவரப்படுகின்றன. இந்த கண்காட்சியில் பொருட்கள் செய்முறைகள் தொழில்நுட்பம் இயந்திர உபகரணங்கள் யாவும் காட்சிக்கு வைக்கப்படுவதனால் பல புதிய முயற்சியாளர்களை தூண்டும் வகையிலான ஒரு கண்காட்சியாகவும் பல எதிர்கால முயற்சியாளர்களுக்கு பாடங்களைக் கற்றுக்கொடுக்கும் ஒரு கண்காட்சியாகவும் மாணவர்களுக்கு முயற்சியாண்மையை தூண்டுகின்ற கண்காட்சியாகவும் இது நோக்கப்படுகின்றது. இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படுகின்ற படைப்புக்களும் பொருட்களும் மீளமதிப்பீடு செய்யப்பட்டு தேசிய விருதுகளுக்காக தெரிவு செய்யப்படும். இத் தேசிய விருதுகளைப் பெறும் கைப்பணியாளர்களும் சிறுதொழில் மற்றும் நடுத்தரதொழில் முயற்சியாளர்களும் தங்கம் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் பண வெகுமதிகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்படுவார்கள். இது வெற்றியீட்டிய கைப்பணியாளர்களையும் கைத்தொழில் முயற்சியாளர்களையும் ஊக்குவிக்கின்ற மற்றும் அவர்களின் வெற்றிக் கதைகளை மற்றவர்களுக்கு பாடமாக வழங்குகின்ற ஒரு கண்காட்சியாக நோக்கப்படுகின்றது. அத்துடன் 200 இற்கும் மேற்பட்ட விற்பனைக் கூடங்கள் கைப்பணி மற்றும் கைத்தொழில் உற்பத்தியாளர்களுக்கு மலிவான கட்டணத்தில் வழங்கப்படுகின்றது. இந்த விற்பனைக் கூடங்கள் இடைத்தரகர்களின்றி உற்பத்தியாளர்களுக்கு நேரடியாக வழங்கப்படுவதால் அவர்கள் தங்களுடைய புதிய ஆக்கங்களையும் நவீன வடிவமைப்பு சார்ந்த படைப்புக்களையும் நுகர்வோருக்கு விற்பனை செய்வதற்கான ஒரு வாய்ப்பினை இந்த விற்பனைச் சந்தை வழங்குகின்றது. இதன் மூலம் பல உற்பத்தியாளர்களுக்கு உள்நாட்டு தொடர்புகளும் ஏற்றுமதி சார்ந்த வெளிநாட்டு தொடர்புகளும் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உருவாக்கப்படுகின்றன. நுகர்வோரின் கண்ணோட்டத்தில் பல புதிய படைப்புக்களை உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக கொள்வனவு செய்யக்கூடிய வாய்ப்பினைப் பெறுவதால் நியாயமான விலையில் நுகர்வோர் பொருட்களைப் பெறக்கூடிய வாய்ப்பினைப் பெறுகின்றனர். இந்த கண்காட்சியில் 19 கைப்பணித் துறைசார்ந்த பொருட்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. இது மட்பாண்டம் சார்ந்த பொருட்கள் தும்பர உற்பத்திகள் பிரம்பு மற்றும் மூங்கில் சார்ந்த பொருட்கள் உலோகம் சார்ந்த பொருட்கள் ஆபரணங்கள் முகமூடிகள் சங்கீத உபகரணங்கள் ஆடைகள் பற்றிக் மெருகு எண்ணெய் ப+ச்சு சார்ந்த பொருட்கள் சேசத் மரம் சார்ந்த உற்பத்திப் பொருட்கள் காலணிகள் மற்றும் தோற்பொருட்கள் போன்ற பல்வேறு துறைகளை உள்ளடக்குகின்றது. அதேபோன்று 15 சிறுதொழில் மற்றும் நடுத்தர தொழில் துறைசார்ந்த உற்பத்திப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்படும். இயந்திர உபகரணங்கள் தும்புஇறப்பர் மற்றும் பிளாஸ்டிக் சார்ந்த பொருட்கள் கட்டடப் பொருட்கள் கித்துள் சார்ந்த பொருட்கள் பனை சார்ந்த பொருட்கள் இலத்திரனியல் மென்பொருட்கள் உட்பட பல்வேறு துறை சார்ந்த பொருட்கள் காட்சிக்கு வைக்கப்படும். இந்த கண்காட்சி பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலில் தேசிய அருங்கலைகள் பேரவை தேசிய வடிவமைப்புச் சபை கைத்தொழில் அபிவிருத்திச் சபை பனை அபிவிருத்திச் சபை மற்றும் வடகடல் நிறுவனங்களின் பங்களிப்புடன் நடைபெறுகின்றது. அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் மகிந்த சிந்தனை - எதிர்கால நோக்கிற்கு அமைவாக வருடாந்தம் 5000 சிறுதொழில் முயற்சியாளர்களை நடுத்தர தொழில் முயற்சியாளர்களாக தரமுயர்த்துவதும் 200 நடுத்தர முயற்சியாளர்களை பாரிய தொழில் முயற்சியாளர்களாக தரமுயர்த்துவதும் பாரம்பரிய கைப்பணி கைத்தொழிலாளர்களை பொருளாதார ரீதியில் சக்திப்படுத்துவதும் பிரதான நோக்காக இனங்காணப்பட்டுள்ளது. மகிந்த சிந்தனையின் கீழ் சிறுதொழில் மற்றும் நடுத்தரதொழில் முயற்சியாளர்கள் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக நோக்கப்படுவதுடன் சுயதொழில் வாய்ப்புகளுக்கும் வருமான பெருக்கத்திற்குமான உபாயமாகவும் பொருளாதார வளர்ச்சி வறுமைக் குறைப்பு மற்றும் சமமான வருமான பங்கீடு என்பவற்றினூடாக பின்தங்கிய பிராந்தியங்களை எழுச்சிபெறும் பிராந்தியங்களாக மாற்றுகின்ற செயற்திட்டமாகவும் நோக்கப்படுகின்றது. அதிமேதகு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட திவி நெகும தேசிய நிகழ்ச்சித் திட்டத்திற்கு பங்களிப்புச் செய்கின்ற ஒரு பக்கத்துணையான நிகழ்ச்சித் திட்டமாக இதனை நோக்கலாம். இத்தேசிய கண்காட்சியானது கைப்பணியாளர்களையும் சிறுதொழில் மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதுடன் அவர்களுக்கு சந்தை வாய்ப்பை விரிவாக்குவதன் மூலம் அவர்களை பொருளாதார ரீதியாக சக்திப்படுத்துகின்ற நிகழ்ச்சித் திட்டமாக நான் காண்கின்றேன். இத்தேசிய கண்காட்சியையும் விற்பனைச் சந்தையையும் அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியினை சிறப்பிக்க வந்திருக்கும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பசில் ராஜபக்ச அவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். உங்களுடைய வருகை கைப்பணியாளர்களிற்கும் சிறுதொழில் மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களிற்கும் பாரிய சக்தியையும் நம்பிக்கையையும் வழங்கியுள்ளது. அத்துடன் எனது அழைப்பை ஏற்று வருகை தந்த சகல அமைச்சர்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். இத்தேசிய கண்காட்சியும் விற்பனைச் சந்தையும் மிகவும் வெற்றிகரமானதாக அமையவேண்டுமென வாழ்த்தி விடைபெறுகின்றேன்.























































0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’