பொ துநலவாய நாடுகளில் மனித உரிமைகள் பேணப்படுவதை உறுதிப்படுத்தும் விதமாக சிறப்புத் தூதுவர் ஒருவரை நியமிக்க சில நாடுகள் எடுத்துள்ள முயற்சியை இலங்கை எதிர்க்குமென்று அந்நாட்டு அரச பேச்சாளர் பிபிசியிடம் கூறியுள்ளார்.
ஆலோசனைக் குழுவொன்று தாயாரித்துள்ள அறிக்கையொன்று, பொதுநலவாய நாடுகளில் இடம்பெறக்கூடிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எப்படியான அணுகுமுறைகளை கைக்கொள்ள வேண்டும் என்று 100க்கும் அதிகமான ஆலோசனைகளை முன்வைத்துள்ளது. இதன்படியான, மனித உரிமைகள் பற்றிய சிறப்புத் தூதுவர் ஒருவரை நியமிக்கும் யோசனைக்கு இலங்கை உள்ளிட்ட நாடுகள் தமது எதிர்பபைத் தெரிவிக்கும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பேச்சாளரான பந்துல ஜயசேகர பிபிசியிடம் சுட்டிக்காட்டினார். 54 நாடுகள் அங்கம் வகிக்கும் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான பிரச்சனைகளை ஆராய வேண்டும், குறிப்பாக இலங்கையில் நடைபெற்றதாக்க கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்துகின்றன.
அடுத்த மாநாடு இலங்கையில்!
அடுத்து நடைபெறவுள்ள 2013 ஆம் ஆண்டு மாநாடு இலங்கையில் நடைபெறுமானால் அதனைப் புறக்கணிக்கப் போவதாக கனடா ஏற்கனவே எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.இதற்கிடையே, இலங்கைக்கு எதிரான மனித உரிமைக் குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டி வருகின்ற அம்னெஸ்டி இன்டர்நெஷனல், அடுத்த மாநாட்டை இலங்கையில் நடத்த அனுமதிக்கக் கூடாது என்று கூறியுள்ளது.
ஆனால் அம்னெஸ்டி இன்டர்நெஷனலுக்கு இலங்கையை விமர்சிக்க உரிமையெதுவும் கிடையாது என்று கூறிய பந்துல ஜயசேகர, அதனைப் பக்கச்சார்பானது என்றும் குற்றஞ்சாட்டினார்.
அடுத்த மாநாடு இலங்கையில் தான் நடைபெறுமென்று இன்று அறிவிக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி மகிந்தவின் பேச்சாளர் பிபிசியிடம் கூறினார்.
முடிக்குரிய வாரிசுரிமை சட்டம் மாறுகிறது
இதற்கிடையே, இம்முறை பேர்த் மாநாடு வரலாற்று ரீதியான மாற்றமொன்றுக்கான அடித்தளத்தையும் இட்டுள்ளது.பிரதமர் டேவிட் கமரோனும் இந்த மாற்றத்தை ஆதரித்தார்.
அதன் தொடர்ச்சியாக முடிக்குரிய வாரிசுரிமைச் சட்டத்தை மாற்றியமைக்க, மகாராணியாரை அரசு தலைமையாகக் கொண்டுள்ள 16 பொதுநலவாய நாடுகளின் தலைவர்களும் ஏகமனதாக உடன்பாடு தெரிவித்துள்ளனர்.
அதுதவிர முடிக்குரியவர், ரோமன் கத்தோலிக்கர் ஒருவரை திருமணம் முடிக்க முடியாது என்றிருந்த தடையும் இன்றுமுதல் நீக்கப்பட்டுவிட்டது.
இம்முறை பேர்த் மாநாடு, ஐக்கிய இராச்சியத்தில் 300 ஆண்டுகாலம் பழமையான முடிக்கான வாரிசுரிமை சட்டத்தையும் இத்தால் மாற்றியமைத்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’