வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 29 அக்டோபர், 2011

தமிழ்க் கூட்டமைப்பை ஐ.நா.பிரதிநிதிகள் சந்தித்துப் பேசுவது யதார்த்தமற்ற விடயம்: அரசாங்கம் வலியுறுத்தல்


மிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளல்லர். அவர்களை ஐ.நா சபையின் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசுவதென்பது யதார்த்தமற்ற செயற்பாடாகும் என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
ஐ.நா.பொதுச்சபையின் மூன்றாவது குழுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஐ.நா.சபையின் பிரதிநிதிகளைச் சந்தித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். நியூயோர்க் சென்றுள்ள அமைச்சர் மஹிந்த சமரசிங்க கடந்த புதன்கிழமை ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பான் கீ மூனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். வியாழக்கிழமை ஐ.நா.பொதுச்சபையின் மூன்றாவது குழுக்கூட்டத்திலும் கலந்துகொண்டு உரையாற்றினார். பான் கீ மூனுடனான சந்திப்பில் ஐ.நா.வின் அரசியல் விவகாரங்களுக்கான பொறுப்பாளர் லின் பஸ்கோ மற்றும் விஜய் நம்பியார் ஆகியோரும் கலந்துகொண்டனர். அமைச்சர் மகிந்த சமரசிங்கவுடன் ஐ.நாவுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி கலாநிதி பாலித கொஹண பங்குபற்றியிருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்வரும் முதலாம் திகதி ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பான் கீ மூனைச் சந்திக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து மஹிந்த சமரசிங்கவுடன் தொடர்புகொண்டு கேட்டபோது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளை பான் கீ மூன் சந்திக்க மாட்டார் என்றே நாங்கள் நம்புகிறோம். இதற்கான சந்தர்ப்பங்கள் அரிதாகவே உள்ளதெனத் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் அல்லர். இன்னும் பல தமிழக் கட்சிகள் நாட்டில் உள்ளன என்பதை நாம் ஐ.நா.வின் பிரதிநிதிகளுக்கு விளக்கியுள்ளோம். கூட்டமைப்பினரைச் சந்திப்பது யதார்த்தமற்ற விடயமாகும்" என்றார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’