வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 14 அக்டோபர், 2011

கல்மடு பிரதேசத்திலிருந்து பெருமளவு ஆயுதங்கள் மீட்பு


வுனியா, கல்மடு பிரதேசத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பெருமளவு ஆயுதங்களை இன்று வியாழக்கிழமை மீட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா பொலிஸாருக்கு பொது மக்களிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் 5 அடி ஆழத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 1.5 கிலோகிராம் நிறையுடைய 3 கிளேமோர் குண்டுகளும் 1 கிலோ கிராம் நிறையுடைய 10 கிளைமோர் குண்டுகளும் மோட்டார் குண்டு ஒன்றும் ஜொனி மிதிவெடிகள் 3 மற்றும் டெட்டனேட்டர் வயர் ஒன்றும் மீட்கப்பட்டதாக வவுனியா பொலிஸ் தலைமையக பொலிஸ் அதிகாரி அசேல கே.ஹேரத் தெரிவித்தார். மீட்கப்பட்ட ஆயதங்களை வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமரசிறி சேனாரத்தின, பொலிஸ் மூலஸ்தான பொலிஸ் அதிகாரி அசேல கே.ஹேரத் , மேலதிக பொலிஸ் தலைமையகத்தின் பொறுப்பதிகாரி பிரட்ரிக் தம்மன ஆராட்சிகே ஆகியோர் பார்வையிடுவதை படங்களில் காணலாம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’