வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 14 அக்டோபர், 2011

எதுவித பாரபட்சமும் இன்றி ஐ.நா.செயற்பட வேண்டும்: ஜி.எல்.பீரிஸ்


துவித பாரபட்சமுமின்றி இலங்கையுடன் இணைந்து செயற்படுமாறு ஐக்கிய நாடுகள் சபைக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பிரீஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
ஐ.நா.செயலாளர் நாயகத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு இலங்கை தொடர்பில் நியாயமற்ற அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதாக ஜீ.எல்.பிரீஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ஐ.நா.நிபுணர் குழு தனது அறிக்கையை தயாரிக்க சான்றுகள் பெறப்பட்ட விதமானது இலங்கை மீது பாரிய குற்றச்சாட்டுக்கள் இல்லை என்பதை நிரூபித்துள்ளது. 30 வருடகால யுத்தம் குறித்து இனந்தெரியாத குழு தகவல் வழங்குமாயின் அதனை வைத்துக் கொண்டு விசாரணை நடத்த முடியாது கதை ஒன்றை தயாரித்து பொய்யான குற்றச்சாட்டுக்களையே நிபுணர் குழு முன்வைத்துள்ளது. இந்த நிலையில் 1952 ஆம் ஆண்டு தொடக்கம் ஐ.நா.வுடன் இணைந்திருக்கும் இலங்கை மீது பாரபட்சம் காட்டாமல் ஐ.நா செயற்பட வேண்டும் என்றார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’